பழைய தளம் கிடைத்து விட்டது..
நண்பர்களே,
பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.
நன்றி,
டக்கால்டி
Labels:
மொக்கை
ஸ்டார் கவிதை
இது ஸ்டார் கவிதை (அப்படின்னு அவங்களே சொல்லிக்குவாங்க)...நம்ம தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் ஹைக்கூ எழுதினால் எப்படி இருக்குமுன்னு ஒரு சிறிய கற்பனை.இது முழுக்க முழுக்க ஜாலிக்காகவே எழுதப் பட்டது. படிச்சுட்டு சீரியஸ் ஆனா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல. படிச்சுட்டு புரியலைன்னு விளக்கம் கேட்டாலும் கம்பெனி பொறுப்பில்லை...ஹி ஹி...
முதலில் கேப்டன் விஜயகாந்த்:
ஹ்ம்ம்.. நான்
அங்கிட்டு போனேனா 41
ஹ்ம்ம்..இங்கிட்டு போனேனா 100க்கு மேலே
எங்க போனாலும்
தெய்வமும் நீங்களும்
தான் என் கூட்டணி
ஹ்ம்ம்..வர்ட்டா ஹ்ம்ம்...
டாகுடறு விஜய்:
மாமிச உடம்பு மனுஷனுங்ண்ணா
ண்ணா..
அஹ் வணக்கமுங்ண்ணா
அஹ் காந்திங்ண்ணா
அஹ் எம்ஜியாருங்ண்ணா
அஹ் ஜெயலலிதாங்ண்ணா
அஹ் விஜயகாந்துங்ண்ணா
இப்போ நானுங்ண்ணா
ஹி ஹி...
வரட்டும்மாங்ண்ணா
அலட்டல் நாயகன் அஜீத்:
அது
ஏலே
தனியா முளைச்ச காட்டுமரம்லே
நெறைய பேஸ்டேன் பாஸ்
விழாவுக்கு வர சொல்லி
வற்புறுத்துறாங்க அய்யா
கான்பிடேன்ஸ் பாஸ்
கான்பிடேன்ஸ்
அது!!!
சூப்பர் ஸ்டாரு :
கண்ணா...ஹா ஹா ஹா
கடமை செய் பலனை (பழனி) எதிர்பார்
அரோகரா அரோகரா
யானை இல்ல குதிரை
இப்போ ஒரு குட்டி கதை சொல்றேன்
'இப்போ ஒரு குட்டி கதை '
கதையா
அதான் சொல்லிட்டேன்ல
ஹா ஹா ஹா
வர்ட்டா கண்ணா...
விரலு நடிகரு:
ஆஹ் விரலு ஆஹ் விசிலு
எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா
எங்கப்பா எனக்கு திரைல நடிக்க
கத்துக் கொடுத்து இருக்காரு
வாழ்க்கைல நடிக்க சொல்லித் தரலை
(உருப்படியா ஆகமொத்தம் எதுவும் சொல்லித் தரல)
எவன்டி உன்ன பெத்தான்
மொட்டை மதன் இல்லை மன்மதன்
இந்த நடிப்பு மட்டும்
திரையிலும் வாழ்க்கையிலும்!
பெருங்கரடி:
டண்டணக்கா ஹே டணக்குணக்கா!
ஹவ் டூ யு சே
ஐ ஆம் நாட் எ க்ரவுட் புல்லர்
மானமுள்ள தமிழன்
டப்பு டிப்பி டாப்பு டிப்பி
டுப்பு டப்பு டூப்பு டாப்பு
இது தான் என் மெட்டு
அதுக்கேத்த பல பாட்டு
யு ஆர் ப்ரம் விச் டெலிவிஷன்?
காமெடியன் செந்தில்:
அண்ணே நீங்க அறிவுக் கொழுந்துண்ணே
அண்ணே
இதுல எப்புடிண்ணே விளக்கெரியும்
அதானே இது
அஹாண்ணே
எனக்கு அமேரிக்கவில சூட்டிங் இருக்குது
அதனால் தான் சொல்கிறேன்
காத்தவராயனுக்கு ஓட்டுப் போடுங்கள்
புலிக்குட்டி ப்ரதர் பூனைக்குட்டி
ஹரே ஒஹ் சாம்போ!
குழப்ப நாயகன் கமலஹாசன்:
ஆஹ் ஆஆஅஹ் ஆஆஹ்!!
வணக்கம்
டாவுக்கு கண்ணு டொக்கு
சொத்தைப் பல்லுக்கு
சொத்தையே பிரிக்கிறதா
உன் உள்பாடி சைஸ் என்ன?
கடவுள் இருந்தா நல்லா
இருக்கும்னு சொல்றேன்
நல்லவனா கெட்டவனா?
கடவுள் பாதி மிருகம் பாதி
கண்ணுக்குட்டி அம்மா
செத்து போச்சு கண்ணுக்குட்டி
ஏற்றத் துணியும் அணி சேர்த்துக்கணுமா?
அன்பே சிவம்!
அடியேன் ராமானுஜதாசன்
இல்லை கமலஹாசன்!
தலைவரு கவுண்டமணி:
அடங்கொன்னியா!
இதுக்கு பேரு தான் மேண்டில்
இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு
ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்ங்கறது
யூரின் வரட்டும் வரட்டும்
துன்பத்திலும் இன்பம்
கொசு தொல்லை தாங்க முடியல டா
தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைடா
நான் பால்காரன்
நர்ஸ் இல்லடா பர்சு..பர்சு...
டிப்பன் பாக்ஸ் தலையா
கரிச்சட்டி தலையா
கோமுட்டி தலையா
பிசாசு தலையா
அட போங்கடா
சொறி புடிச்ச மொண்ணை நாய்ங்களா...
காத்து ரெண்டுலயும் குய்ன்ன்னு கேக்குது
ஐயோ சிரிக்கிறா டா சிரிக்கிறா
ஐ ஆம் கிரேட் தி மிஸ்டேக்
டன் தி மிஸ்டேக்!!!
இனி ஸ்டார்ட் ம்யூசிக்..எனக்கு அர்ச்சனை ஆரம்பியுங்க...
Labels:
சிறுகதை
பிக்கப்பு-ட்ராப்பு-எஸ்கேப்பு
"என்னப்பா சொல்ற?" அதிர்ச்சியின் உச்சத்தில் சுசியின் குரல் நடுங்கியது.
"ஆமா!நான் உண்மையா தான் சொல்றேன்.நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது.பேசாம நாம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்.அதான் நல்லது" என்றான் தருண்.
"ஹே!சும்மா விளையாடாத...எப்பப் பார்த்தாலும் உனக்கு விளையாட்டு தான்..." என்று செயற்கை புன்னகையை முகத்தில் வரவழைத்து சொன்னாலும் அவள் முகத்தில் சிறு கலக்கம் இருந்தது.
"ஆமா, நீ என் மாமன் பொண்ணு பாரு..உன்கிட்ட விளையாடுறது தான் எனக்கு வேலை.நான் சீரியஸா தான் சொல்றேன்.நம்ம ரெண்டு பேரும் இதோட பிரிஞ்சுடலாம்"
"அதான் ஏன்? டேல் மீ ஒன் குட் ரீசன். இவ்ளோ நாள் நல்லா தான் போச்சு. நல்லா தான பழகினோம். இப்போ மட்டும் என்ன திடீர்னு? நான் எதாச்சும் தப்பு
பண்ணிட்டனா? எதுனாலும் சொல்லு நான் திருத்திக்கிறேன். ஐ நீட் யு டா!!! ஐ லவ் யூ சோ மச் டா!!!" என்று கூறியவளின் குரல் உடனே உடைந்தது. உடம்பு குலுங்கியது..கண்களில் நீர்த்திவலை.
"இல்ல சுசி..எனக்கு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு...பட் சொல்லி தான் ஆகணும்.உன் மேலே எனக்கு எந்த கோபமும், வெறுப்பும் இல்ல. வீட்டுல நம்ம லவ் விஷயத்தை பத்தி சொன்னேன். உங்க வீட்டுலயும் பிரச்சினை. அந்த பொண்ணு அவுங்க வீட்டுல முதல்ல பேசட்டும், அப்புறம் பார்க்கலாம் என்று ரெண்டு மாசம் முன்னாடி சொன்னவங்க,இனிமே அதைப் பத்தி எங்க கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டாங்க.யோசிச்சு பார்த்தேன்.அவங்க சொல்றதுலயும் சில நல்ல விஷயங்கள் இருக்கு. அதான்..." என்று இழுத்தான் தருண்.
"அப்போ இவ்ளோ நாள் என்னை நீ உண்மையாவே லவ் பண்ணல இல்ல. ஊர் சுத்துறதுக்கும், உடம்பை தடவுறதுக்கும் தான் உனக்கு நான் தேவைப் பட்டிருக்கேன். அதெப்படி டா எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க? ஒ.கே இனிமே என் முகத்துலேயே முழிக்காத...நான் எப்படியோ தொலைஞ்சு போறேன்.குட் பை" என்று கூறியவுடன் அவனை திரும்பிகூட பார்க்காமல் சென்று விட்டாள்.
இரவு 8 மணி, சென்னையில் ஒரு டாஸ்மாக்கில்...
"மாப்ள, எப்படியோ சில ஐடியாக்களை யோசிச்சு, சில சினிமா வசனம் எல்லாம் மிக்ஸ் பண்ணி எப்படியோ சுசியை கழட்டி விட்டுட்டேன் டா, சோ உனக்கு இன்னிக்கு ட்ரீட்.எவ்ளோ வேணும்னாலும் குடிச்சுக்கோ. ஐ ஆம் வெரி ஹாப்பி." என்றான் தருண் தன் நண்பன் ஹரியிடம்.
"ஆமாம் டா. இப்போ தான் உன் கிட்னியை யூஸ் பண்ணி ஒரு நல்ல காரியம் பண்ணிருக்கே. இதுல ட்ரீட் வேற.இப்போ அடுத்து நீ வேற தாரிகான்னு ஒரு பொண்ணை லவ் பண்றதா சொல்லிக்கிட்டு இருக்க. அதையும் இதே மாதிரி மேட்டர் முடிச்சதும் கழட்டி விடப் போறியா?"
"மச்சி என்னடா சொல்ற...தாரிகா சுசிய விட செம அழகு டா...செம ஹோம்லி, செம ஸ்ட்ரக்சர், லவ்லி கேள் டா அவ...அவளைப் போய் கழட்டி விடுவேனா நான்? நல்லா நோட் பண்ணிக்கோ அவள் தான் எனக்கு இல்லத்து அரசி..."
"ஆமா இப்படி தான் சுசியை பார்க்கும் போதும் இதே டையலாக் விட்ட...நீ காமிச்ச தாரிகவை விட சுசி கொஞ்சம் கலரும், அழகும் கம்மி தான் டா. ஆனா அது தான் இயல்பான அழகு. தாரிகா மேக் அப் கலைச்சா எப்படி இருப்பாளோ? சரி எனக்கென்ன அதைப் பத்தி கவலை. அது உன் பாடு? ஆனா ஒரே ஒரு கேள்வி மாப்ள, அதெப்படி டா எல்லா பிகர்களும் என்ன மாதிரி நல்ல பசங்களை எல்லாம் விட்டுட்டு உங்களை மாதிரி கேரக்டர் கிட்ட உடனே விழுந்துடுறாங்க?"
"அதுக்கு எல்லாம் திறமை வேணும் டா..உனக்கு எதுவும் இன்னும் மடங்கலைன்னு பொறாமைல பேசாதே...தண்ணியை குடி தண்ணியை குடி..."
"ஆமாம் டா. நீ செஞ்சுட்டு இருக்கிற கேடு கெட்ட காரியத்துக்கு நண்பன் ஆச்சேன்னு ஒத்து ஊதுறேன் பாரு..நீ ஏன் சொல்ல மாட்ட?"
"மாப்ள கோச்சுக்காத டா. அவனவன் ஆறேழு பிகரை கழட்டி விட்டுட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி சுத்துறாங்க...நான் இப்போ தானடா ஆரம்பிச்சு இருக்கேன். அது என்னமோ தெரியல, சுசியை விட தாரிகா பெட்டரா தோனுச்சு அதான். ஆனா நீ சொல்றதும் சரி தான். நான் ரொம்ப கேவலமா போய்கிட்டு இருக்கேன். சுசி இன்னிக்கு சாயந்திரம் நான் அவளை லவ் பண்ணலைன்னு சொல்ல சொல்ல பயங்கரமா அழுதா டா...பாவம் டா சுசி..."
மப்பு மண்டைக்கேற உளற ஆரம்பித்த தருண் ராவாக குவார்ட்டர் பாட்டிலை கவுத்த முயற்சித்து மட்டை ஆனான்.சுயநினைவு இழந்த தருணத்திலும் அப்போது அவன் வாய், 'சுசி! சுசி!' என்று உளறுவதை கவனித்த ஹரி, "என்ன ஜென்மமடா நீங்க எல்லாம்?உங்களை எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா?நாய்க் காதல் பண்ற நாய்ங்களா.." என்றான்.
அதே நாள் இரவில், தி.நகர் கேள்ஸ் பி.ஜி ஒன்றில்,
"என்னடி சுசி? இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியுது? உன் ஆளு கூட ஊரு சுத்திருப்ப போல இருக்கே" என்றபடியே சுசியிடம் கேட்டவாறு அறையில் நுழைந்தாள் அவள் தோழி மலர்விழி.
"ஆளா? அவன் எல்லாம் ஒரு ஆளா? அவன் மூஞ்சும், முகரையும்...ஓட்ட டூ வீலர் ஒன்னை வெச்சுகிட்டு அவன் கொடுக்குற சீன் இருக்கே...எதோ அவன் கூட சுத்துனதுல நல்லா டைம் பாஸ் ஆச்சு...ஓசியில நல்லா ஊரை சுத்துன மாதிரியும் ஆச்சு.நம்ம வேலைக்கு வெச்ச ஆளுங்க கூட இப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க..அதுனால நானும் கொஞ்ச நாள் ஓட்டிகிட்டு இருந்தேன். எப்போ பிரஷாந்த் என்னை கார்ல பிக் அப் பண்ணானோ அப்பவே அடுத்த காதலும் பிக் அப் ஆயிடுச்சுடி...நானா எப்படி தருணை கழட்டி விடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். இன்னிக்கு அவனே முந்திக்கிட்டான். சும்மா அழுவுற மாதிரி ஒரு சின்ன பெர்பார்மன்ஸ் கொடுத்துட்டு வந்துட்டேன்.இனிமே அவனா வந்து மறுபடியும் தொல்லை பண்ணா கூட அவனை ஈவ் டீசிங்க்ல மாட்டி விடுறதுக்கு என் பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கு. எப்படியோ இப்ப தான் நான் சந்தோஷமா இருக்கேன்" என்றால் சுசி.
ஆனால் பாவம் ஹரிக்கும் சரி, தருணுக்கும் சரி இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

"ரெண்டு குவார்ட்டர் நெப்போலியன்...ஒரு சென்னா மசாலா...அரை பாக்கெட் கிங்க்ஸ்...ஒரு அரை லிட்டர் கோக்... மூணு பாக்கெட் தண்ணி கொடுங்க..."
"வேற எதாவது வேணுமா சார்?"
"ஹலோ நாம வழக்கமா சொல்றத சொல்லிட்டேன் மச்சி? அவ்ளோ தான...வேறெதுவும் வேணாமில்ல...சரி நீ சீக்கிரம் வாடா..மேட்ச் ஸ்டார்ட் ஆகப் போகுது.ஓகே பை... ஓகே பாஸ். இப்போதைக்கு இது போதும். சாப்பிட்டு சொல்றோம். முதல்ல இதை கொஞ்சம் வேகமா கொண்டு வாங்க." சட்டையின் மேல் ரெண்டு பட்டனை கழட்டி காலரை சற்று மேல் தூக்கி விட்டு தாடியை தடவிக்கொண்டே வேளச்சேரி ரூப் டாப் டாஸ்மாக் சாரில் ரிலாக்சாக சாய்ந்து பெருமூச்சு விட்ட படி காத்திருந்தான் ராம்.
இன்னும் பத்து நிமிடத்தில் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை காலிறுதி கிரிக்கெட் போட்டி. அதை டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக் கொண்டே குடிமகன்களின் கும்மாளத்துடன் பார்த்து கொண்டாடுவது என்று முடிவு செய்து இருந்தனர் ராமும் அவனது நண்பன் லெனினும்.லெனின் வருகைக்காக தான் காத்திருக்கிறான் ராம். லெனினும் ராமும் ஒன்றாகப் படித்தவர்கள் இல்லை. ராமின் பள்ளி நண்பனின் கல்லூரி நண்பன் ஆனதால் லெனினும் ராமின் நண்பன் ஆகிப் போனான். சொல்லப் போனால் இருவருமே சில நாட்களிலேயே தமக்குள் பல கருத்துக்கள் ஒத்து போவதை உணர்ந்து நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.
"வணக்கம் மச்சி...சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சி.." ராமின் எதிர் சீட்டில் அமர்ந்தான் லெனின்.
"வாடி மாப்ள...இதே பொழப்பா போச்சு உனக்கு...ரூம்ல தண்ணி அடிக்க கூடாதுன்னு சொன்னாலும் சொன்னாங்க...நம்ம பொழப்பு நாறப் பொழப்பு ஆயிடுச்சு மச்சி"
"இன்னிக்கு தண்ணிய போட்டுட்டு ரூம்க்கு போயி பிரச்சினை பண்ணிடலாமான்னு சொல்லு...தூள் கிளப்பிடுவோம் ..." கடுப்பானான் லெனின்.
"விடுறா மச்சான், நான் வீக்கெண்டு தான் இங்க வரேன். நீ அங்கேயே இருக்கிறவன்.எதுக்கு பிரச்சினைய பண்ணிக்கிட்டு...அவனுங்களாவது ஒழுக்கமா இருந்துட்டு போவட்டும்...அட்லீஸ்ட் அப்படி அற்பமா நினைச்சுட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும்." என்றான் ராம்.
"மச்சி பை த பை இவரு என் கூட ஆபிஸ்ல வொர்க் பண்றவரு...இவரு பேரு கோபாலன்.என்னோட சீனியர்." இன்ட்ரோ கொடுத்தான் லெனின்.
"ஹலோ பாஸ் என் பேரு ராம்."
மேட்ச் ஆரம்பித்து 15 ஓவர் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்திருந்தது.இன்னொரு குவார்ட்டர் நெப்போலியன் வரவழைக்கப் பட்டது.
"அப்படி போடுங்கையா...இன்னும் முப்பது ரன்னுக்குள்ள எல்லாத்தையும் அவுட் பண்ணுங்க"
ஐந்தாவதாக இறங்கிய அப்ரிடி அவுட் ஆன சந்தோஷத்தில் குதித்தார் கோபாலன்.
பின்னர் இறங்கிய ரசாக்கும், உமர் அக்மலும் நிலைத்து ஆடி, அதிரடியாக ஐம்பது ஓவர்களின் முடிவில் அணியின் ரன்களை 280 ஆக்கி இருந்தனர்.
மீண்டும் மூன்று குவார்ட்டர் வாங்கி முடிக்கப்பட்ட நிலையில் இந்தியா 42 ஓவர்களில் 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது.
"இவனுங்க இப்படி அடிச்சுட்டானுன்களே. இப்படி தான் நம்மளை எல்லா விஷயத்துலயும் அடிக்கறானுங்க. பொறம்போக்கு கஸ்மாலங்க...சுதந்திரம் வாங்குனப்பவே நம்ம ஊர்ல இருக்குற மிச்ச பேரையும் அங்கேயே அனுப்பி இருக்கணும். நம்ம கும்பிடற கோவிலை இடிச்சுட்டு அவனுங்க கட்டுனானுங்க...அதை நாம இடிச்சா பிரச்சினை பண்றானுங்க..." என்று கொதித்தார் கோபாலன்.
"விடுங்க பாஸ்...என் பேரே ராம்...நானே கூலா இருக்கேன்..நீங்க ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க...விளையாடும் போது தான் அந்த டீம் நமக்கு எதிரி...மைதானத்தை விட்டு வெளியே வந்தா அவங்களும் மனுஷங்க தானே...அவங்களுக்கும் குடும்பம் குழந்தைங்க இருக்கும். எல்லா ஊர்லயும் , நாட்டுலயும், இனத்துலயும் சில பேரு செய்ற தப்புக்கு ஏன் அந்த சமூகத்தையே பழி வாங்கிட்டு இருக்கோம்? கண்ணுக்கு கண் என்று அடித்து அடித்து முக்காவாசி பேரு குருடன்கள் ஆகிட்டோம்." என்றான் ராம்.
"ராம்னு பேரு வெச்சா நீங்க கடவுள் ஆயிட முடியுமா? உங்கள மாதிரி ஆளுங்கனால தான் நம்ம இந்து சமூகமே சீரழியுது.." கோபமாக உளறினார் கோபாலன்.
"என்ன சார் உளருறீங்க...நானூறு வருஷத்துக்கு முன்னாடி எப்பயோ அவங்க உங்க ராமர் கோவிலை இடிக்கும் போது பாத்துகிட்டே தானே இருந்தாங்க உங்க ஆளுங்க...அப்போ ஏன் தடுத்து நிறுத்தல?அப்போ நீங்க நான் எல்லாம் பொறக்கவே இல்ல...அப்போ உண்மையா என்ன நடந்துச்சுன்னு நம்ம யாருக்குமே தெரியாது...எவனோ காலப்போக்கில பத்த வெச்சது எத்தனை விஷயமோ....அப்ப விட்டுட்டு இப்போ எதுக்கு கிளறுறீங்க...ரோஷம் லேட்டா தான் உங்க ஆளுங்களுக்கு வந்துச்சோ?" பதிலடி கொடுத்தான் ராம்.
"சார்...உங்களுக்கு ஓவர் ஆயிடுச்சு...வாங்க கெளம்பலாம்...எனக்கும் பசிக்குது. பக்கத்துல இருக்குற தள்ளு வண்டி கடைல போயி தோசை சாப்பிடுவோம்."
பேச்சை திசை திருப்பினான் லெனின்.
அனைவரும் ஆளுக்கொரு முட்டை தோசை சொன்னார்கள். முதல் தோசையை லெனின் கோபாலனுக்கு கொடுக்க, அவர் சாப்பிடும் போதே, லெனினும் அவர் தட்டில் ஒரு பகுதியை கொஞ்சம் காலி செய்து இருந்தான். பிறகு ராமுக்கும், லெனினுக்கும் கடைக்காரம்மா தோசையை கொடுக்க, இப்போது லெனின் தட்டில் கார சட்னியை கொட்டி ஒரு பகுதியை சாப்பிட முயன்றார் கோபாலன்.
தனது தட்டில் கைவைக்க முயன்ற அவரை தடுத்து நிறுத்திய லெனினை குழப்பமாக பார்த்தார் கோபாலன்.
லெனினோ கூலாக அவரைப் பார்த்து, "மசூதி விஷயத்துல தான் நீங்க லேட்டுன்னு நினைச்சேன், முட்டை தோசை விஷயத்துல கூட நீங்க லேட்டு தான் சார். நான் உங்க தட்டுல சாப்பிடும் போதே நீங்க என்னை தடுக்காம விட்டுடீங்க. அதுக்காக நானும் அப்படி இருக்க முடியாது.ஐ ஆம் சாரி சார்." என்றான்.
என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்ற கோபாலனிடம் "இந்தியா ஜெயிடுச்சே!!!" என்று தனது சந்தோஷத்தை கூச்சலிட்டுக் கொண்டு சென்றான் ஒரு இளங்குடிமகன்...
அதே நேரம் அதே இடம்....

அரசியல்
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ...
வரும் சட்டசபைத் தேர்தலையும் தற்போது நடந்துவரும் கிரிக்கெட் உலகக்கோப்பையையும் ஒப்பிட்டு பார்த்ததில் வந்த ஒரு ஜாலி கற்பனை இது.இப்போது நான் கூறப்போகும் ஒப்பீடு முழுக்க முழுக்க ஜாலிக்காகவே, யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம். சரி இப்போது என்னவென்று பார்ப்போமா?
தேர்தல்=உலகக்கோப்பை 2011
க்ரூப் ஏ
========
அ தி மு க
தே மு தி க
ம தி மு க
கம்யூனிஸ்ட்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மனித நேய மக்கள் கட்சி
புதிய தமிழகம்
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்
அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம்
க்ரூப் பி
=======
தி மு க
காங்கிரஸ்
பா.ம.க
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
மூவேந்தர் முன்னேற்ற கழகம்
புதிய பாரதம்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம்
பெருந்தலைவர் மக்கள் கட்சி
இந்த முறையும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய சில தலைவர்களையும், நடந்து வரும் கிரிக்கெட் உலகக்கோப்பையில் கவனிக்கப் பட வேண்டிய சில வீரர்களையும் ஒப்பீடு செய்ததில் கிடைத்த சுவாரசியம் உங்களுக்காகவும்.
1 ) ஜெயலலிதா -சேவாக்
எதையும் பரபரப்புடன் செய்து முடிப்பதிலும், அடித்து ஆடுவதிலும் இவர்களை அடிச்சுக்க ஆளில்லை. பயம்னா என்ன? என்று கேட்பவர்கள்.இவர்களைப் பார்த்து எதிர் அணி வீரர்கள் எப்போதும் சிறிது நடுங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. போதிய ஆகப் பூர்வமான உழைப்பை இவர்கள் செய்ததே இல்லை, அது வலைப் பயற்சியோ இல்லை களப் பணியோ. அதை செய்வதற்கு அவசியமே இல்லை என்று திமிரோடு அலைந்தாலும் காலத்தில் வெளுத்து வாங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
2) கலைஞர் - சில பாகிஸ்தான் வீரர்கள்
அணியில் நல்ல ஊழல் செய்யாத திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும், உள்ளிருக்கும் சில பெருச்சாளிகளை தனது தன லாபத்துக்காக தூண்டிவிட்டு பின்பு விஷயம் வெளியில் தெரிந்து குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் திறமையில் இவர்களை மிஞ்ச ஆட்கள் கிடையாது. அணியில் எப்போதுமே குடும்ப ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும். கம்ரான் அக்மாலுக்கும் அதே தான்...தயாளு அம்மாளின் ஒண்ணு விட்ட பேரனுக்கும் அதே தான். எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் புகார்கள் வந்தாலும் காலத்தில் தனது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள் இவர்கள். போட்டிக்கு முன்பு குழம்பினாலும் போட்டி அன்று சரியான நேரத்தில் தனது ராஜ தந்திரத்தையும் கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்த தெரிந்தவர்கள்.
3 ) கேப்டன் விஜயகாந்த் - விராத் கோலி
துவங்கும் போது அதிரி புதிரியாக எதோ ஏனோ தானோவென்று இருந்திருந்தாலும் இந்தமுறை போட்டிக்கு சரியான திட்டமிடுதலுடன் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். ஏற்கனவே இலவு காத்த கிளி போல அணிக்குள் வர துடித்துக் கொண்டிருந்தவர்களின் வயிற்றில் எரிச்சலை கிளப்பி இருக்கும் நபர்கள் இவர்கள் தான். இவர்களின் இந்த திடீர் எழுச்சி மற்ற அணி வீரர்களை கலங்கடித்ததொடு இல்லாமல் தனது அணியில் வாய்ப்பை தவற விட்ட சிலரையும் எரிச்சல் படுத்தி இருக்கிறது.
4 ) ராமதாஸ் - பிற அணியில் இருக்கும் இந்திய வீர்கள் (எ.கா : வேஸ்ட் இண்டீஸ் சர்வான், சந்தர்பால் )
இவர்கள் அணி மாறும் கலையில் சிறந்தவர்கள். எந்த அணியில் வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி பேர்,புகழ் சம்பாதிப்பவர்கள்.கொள்கை,வெங்காயம் என்று எதுவுமே கிடையாது. ஏனோ தானோ என்று ஆடுபவர்கள். எப்போதாவது வெற்றி பெற்றால் இவர்கள் போடும் கூத்து யாராலும் தாங்க முடியாது.
5 ) வைகோ-டிராவிட்
இவ்விருவருமே ஒரு காலத்தில் தனது திறமையால் கொடி கட்டி பறந்தவர்கள். இன்று யாருமே இவர்களை கண்டு கொள்ளாததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இவர்கள் இன்னும் மீளவே இல்லை. இவர்களின் இன்றைய நிலைமையை அழாகாக விளக்கும் பாட்டு "ஜகமே மந்திரம் மனமே தந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ ஓஓ..."
6 ) ப.சிதம்பரம் - பாண்டிங்
இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். அம்பயரை மிரட்டுவது, ஸ்லெட்ஜிங் போன்றவையை கொண்டுவந்தது என்பது இவர்களின் சாதனைகள். மிரட்டியே ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர்கள். உதார் விடுவதிலும், பேசியே சமாளிப்பதிலும் வல்லவர்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இவர்களுக்கு மிகவும் குறைவே. மிரட்டி நினைத்ததை சாதித்து காட்டுவார்கள் அது 63 சீட்டாக இருந்தாலும் சரி அடுத்த ஆட்ட விக்கெட்டுகளையும் சேர்த்து 63 விக்கெட்டுகள் ஆனாலும் சரி.
7) கிருஷ்ணசாமி - இர்பான் பதான் மற்றும் கார்த்திக் - மொகம்மத் கைப்
இது காணமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு. போட்டி நேரங்களில் பெயர் அடிபடுவதொடு சரி.
8 ) சரத்குமார் - கனடா அணியின் பாலாஜி ராவ்
அணியில் இருப்பதையே தனது வாழ்நாள் சாதனையாக கருதுபவர்கள் இவர்கள். பெரிதாக சொல்லிக்கொள்ள நல்ல பின்புலமோ, அனுபவமோ, அணியோ கிடையாது.
9 ) கம்யூனிஸ்ட் தா.பாண்டியன் - ஸ்டீவ் டிக்கொலோ
ரொம்ப நாளாக அடிக்கொண்டிருந்தாலும், இப்போது வயதாகி விட்ட காரணத்தால் ஆட்டத்திறமை மங்கிபோய் உள்ளது. எதோ இடத்தை நிரப்பும் filler போல இவர்களின் பரிதாப நிலைமை. புதிய வீரர்களின் அணிவகுப்பிலும் அவர்கள் திறமையிலும் சற்று ஆடிப் போய் உள்ளனர்.
10 ) சுயேட்சைகள் - கெவின் ஒ பிரையன்கள்
எங்கேயோ எப்போதோ சோபிக்கும் அபாரத் திறன் படைத்தவர்கள். தனி ஆளாக நின்று சில ஆட்டங்களில் வென்றே கொடுத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போல தான். பெரிதும் கண்டுகொள்ளப் படாமலே சிறு புள்ளியாய் காலப் போக்கில் மறைந்து போவார்கள்.
11) இளையதளபதி விஜய்- அஷ்வின்
இவர்கள் பேரு மட்டும் தான் அடி படும். ஆனால் இவங்க ஆட்டத்திலேயே இல்லை. இதுக்கு மேலே சொல்ல என் கிட்டயும் ஒன்னும் இல்லை.
மீண்டும் இது போல கண்டிப்பா எதாச்சும் பினாத்த வருவேன். பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி.

சினிமா
இப்போது அண்ணன் வெள்ளை சுப்பையாவைப் பற்றி நான் சேகரித்த தகவல்கள் உங்களுக்காக.
ஆனால் இவர் நடித்த பாடலில் எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பிடித்திருக்கும் பாட்டு என்றால், கரகாட்டகாரனில் வரும் "ஊரு விட்டு ஊரு வந்து" என்ற பாட்டு தான்.அந்த பாடலும் உங்க பார்வைக்காக.
பயணங்கள் முடிவதில்லை, அமைதிப்படை போன்று இவர் நடித்த பல படங்கள் சில்வர் ஜுபிலி ஆகி இருக்கிறதாம். பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் வெளிவந்த கரகாட்டகாரன் இரண்டு வருடங்கள் ஓடியது. இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோரின் நட்பே தன்னை அந்த படத்தில் நடிக்க வைத்ததாகவும் குறிப்பிடுகிறார். அதே பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிரபு-சில்க் ஸ்மிதா நடித்த கோழி கூவுது படத்திலும் நடித்திருக்கிறார். அந்த படமும் அனைத்து ஊர்களிலும் 150 நாட்கள் ஓடியதாக கூறுகிறார்.மேலும் கேப்டன் விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே,வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் இளையராஜாவின் இசை தான் என்றாலும், இளையராஜா, கங்கை அமரன், ஆர்.சுந்தர்ராஜனின் நட்பும் அவர்களின் எளிமையாகப் பழகும் விதமும் தான் என்கிறார்.
ஒரு காலத்தில் தேனாம்பேட்டையில் இவர், அண்மையில் மறைந்த இசை அமைப்பாளர் சந்திர போஸ், தேவா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோர்கள்
ஒன்றாக வசித்து இருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் அனைவரும் சங்கிலி முருகன் இருந்த லாட்ஜில் அறை எண் 92 -சியை ஞாபகம் வைத்திருக்கிறார். இன்று சாலிக்ராமம் பங்களாவில் இவர்கள் குடியிருந்தாலும் அந்த இனிமையான நாட்களை என்றும் அவர்கள் மறக்க மாட்டார்கள், இன்றும் நினைச்சுப் பார்ப்பார்கள் என்கிறார்.
இவரை சென்டிமேன்ட்டுக்காக பல படங்களில் ஒரு சீன், அரை சீன் காட்சிகளில் நடிக்க கூப்பிட்டாலும் உடனே சம்மதிப்பாராம்.இயக்குனர் தரணி இவரை அனைத்துப் படங்களிலும் நடிக்க அழைப்பதாக கூறுகிறார்.தற்போது கே.வி ஆனந்தின் இயக்கத்தில் உள்ள கோ படத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியலையும் விட்டு வைக்கவில்லை. சன் டி.வியில் தங்கம், ராஜ் டி,வியில் வீட்டுக்கு வீடு, கலைஞர் டி.வியில் செண்பகமே போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இப்படி பட்ட ஆடம்பரம் இல்லாத, கொடுக்க்கரத்தை வாங்கிட்டு நடிக்கும், எளிமையான ஒரு கலைஞனை பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
கண்டிப்பா மீண்டும் எதாச்சும் பினாத்த வருவேன்.இவ்வளவு நேரம் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி.
ஜிம்பலக்கடி பம்பாவும் பம்பலக்கடி ஜிம்பாவும்..
எனக்கு எப்பவுமே இந்த ரெண்டு பேரும் கன்பியுஸ் பண்றவங்க தான்..இவர்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?
அண்ணன் கவுண்டமணியை தெரியாதவங்க தமிழ்நாட்டுல யாரும் இருக்க முடியாது. அப்பேற்பட்ட கலைஞன் முன்னேற, கூட நடித்த கேரக்டர்களின் பங்களிப்பு அபாரமானது.உசிலமணி,பசி நாராயணன், ஓமக்குச்சி நரசிம்மன் முதல் சார்லி,வடிவேலு வரை அனைவரும் அதில் அடக்கம்.அதில் செந்தில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டாலும், நாம் கவனிக்காமல் விட்ட மற்ற பலரில் ரெண்டு பேர் தான் இவர்கள். பேரிலும் கூட ஒற்றுமை உடையவர்கள். ஆம் அவர்கள் தான் கருப்பு சுப்பையா மற்றும் வெள்ளை சுப்பையா.
மேலும் படிக்கும் முன்னர் இவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் உங்களுக்கு. இவர்களைப் பற்றி தெரியாத சிலருக்காக. இளைய திலகம் பிரபு நடித்த ஜல்லிக் கட்டு காளை என்ற படத்தில் நகைச்சுவை பகுதியில் "ஐ ஆம் ஜிம்பலக்கடி பம்பா" என்ற ஆப்ரிக்கன் அங்கிள் ஒருவர் வருவாரே அவர் தான் கருப்பு சுப்பையா. கரகாட்டக்காரன் படத்தில் வரும் "ஊரு விட்டு ஊரு வந்து" பாடலில் பின்னால்ஆடும் ஒருவராக வருபவர் வெள்ளை சுப்பையா. இவரை மேலும் எளிதாக கண்டு கொள்ள வேண்டுமே ஆனால் "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் வரும் "மேகம் கருக்கையிலே" என்ற பாடலை பார்க்கலாம். இப்படி மக்ககளால் அதிகம் கவனிக்கப் படாத இவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த இடுகை.
90 களின் தமிழ் படங்களில், குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களின் டைட்டில் கார்டில் இவர்களின் பேரை பார்த்திருக்கிறேன். அப்போதிலிருந்தே இவர்களில் யார் கருப்பு சுப்பையா? யார் வெள்ளை சுப்பையா? என்ற குழப்பம் இருக்கும். கொஞ்ச நாளில் வெள்ளையாய் இருப்பவர் தான் வெள்ளை சுப்பையா என்று நானே நினைத்துக் கொண்டேன். ஆச்சரியம் என்ன என்றால் அது தான் உண்மையும் கூட. அப்போதெல்லாம் இந்த அளவு மீடியா வளர்ந்திருக்காத காரணத்தால் யாரிடம் சென்று இவர்களைப் பற்றி கேட்டாலும் அவர்களுக்கும் தெரியாது. என் அம்மாவிடம் கேட்டாலோ,படிக்கறதை பத்தி யோசிக்காம இதை பத்தி யோசிக்கிறியா? என்று மோர் கடையும் மத்துடன் தரிசனம் கொடுப்பாள்.
ஒருவழியாக வெள்ளை சுப்பையாவை பற்றிய எண்ணம் திடமாகிப் போன நிலையில் கருப்பு சுப்பையா அவர்களைப் பற்றி ஒரு புதிய குழப்பம் என்னை வந்து தொற்றிக் கொண்டது. இந்த இடத்தில் அண்ணன் பசி நாராயணனைப் பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுக்கவேண்டி இருக்கிறது. சூரியன் படத்தில் தலைவர் கவுண்டமணியின் அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்ற நகைச்சுவை காட்சியின் துவக்கத்தில் "என்னடா ஓட்டை வாய் நாராயணா!குளிக்கிறியோ இல்லையோ சிவகடாட்சமா நெத்தில பட்டை போட்டுக்குற. ஆனா இந்த மாதிரி வேலையில இருக்கறவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்க" என்று ஒருவரைப் பார்த்து சொல்வாரே அவரே தான் பசி நாராயணன். பசி என்ற படத்தில் முதலாக நடித்த காரணத்தால் அவருக்கு இந்த பெயர். இதே படத்தில் நடித்த இன்னொரு நடிகை பசி சத்யா. இவர் கமலின் மகளிர் மட்டும் படத்தில் நாசரின் உதவியாளராக நடித்து இருப்பார்.இவரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையே.
வேடிக்கை என்னவென்றால், கருப்பு சுப்பையா என்பவர் பசி நாராயணனா இல்லை ஜிம்பலக்கடி பம்பாவா என்ற குழப்பம் எனக்கு இன்று தான் தீர்ந்தது. ஜிம்பலக்கடி பம்பா தான் கருப்பு சுப்பையா அவர்கள்.அவரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை என்னால் திரட்ட முடியவில்லை. நண்பர்கள் யாருக்கேனும் தெரிந்து இருந்தால் இணையத் தொடுப்பு கொடுங்கள்.இன்னொரு வேடிக்கையான விஷயம் இன்று வரையிலும் நான் நடிகை காந்திமதி மற்றும் வடிவுக்கரசியை பெயர் மாற்றிக் கூறி குழம்புவதுண்டு. எப்போது இவர்கள் திரையில் வந்தாலும் என் அம்மா கேட்கும் முதல் கேள்வி "இவ பேரு என்ன டா?" என் பதில் பெரும்பாலும் தப்பானதாகத் தான் இருக்கும்.சரியாக சொன்ன கணங்கள் எல்லாமே யூகத்தில் சொன்னவையே.
இப்போது அண்ணன் வெள்ளை சுப்பையாவைப் பற்றி நான் சேகரித்த தகவல்கள் உங்களுக்காக.
இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டி என்ற கிராமம். அந்த காலத்து நடிகர்கள் சொன்ன காரணத்தையே தான் இவரும் சொல்றாரு. சின்ன வயசில் படிப்பு வராத காரணத்தால் குறிப்பாக இங்கிலீஷ் வராத காரணத்தால் பள்ளி வாத்தியார் தொல்லை தாங்க முடியாமல் பள்ளியை விட்டு ஓடி வந்தவர். அம்மாவிடம் அடி உதை வாங்கி காலத்தை கடத்திய பொழுது அங்குள்ள ஒரு டூரிங் டாக்கீஸ் சென்று வேலை கேட்டுள்ளார். இவர் சொல்லும் ஒரு அபூர்வத் தகவல், அப்போதெல்லாம் டூரிங் டாக்கீசுக்கு ஆறு மாச காலம் தான் லைசென்ஸ் கொடுப்பார்களாம். அதற்குப் பிறகு லைசென்சை மீண்டும் புதுப் பித்துக் கொள்ள வேண்டுமாம்.
பிறகு அங்கிருந்து மெட்ராஸ் வந்து லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா,எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ஆர்.எஸ்.மனோகர் போன்றவர்களுடன் மூன்று வருட காலம் மேடையில் நடித்து இருக்கிறார்.அப்போது இவர் நாடகத்தின் மேல் தீராத காதல் கொண்ட பைத்தியமாக அலைந்து இருக்கிறார். அப்போது எஸ்.வி.சகஸ்ர நாமம் அவர்கள் நடத்திய ட்ரூப்பிலும் நடித்து இருக்கிறார்.
கிட்டத் தட்ட 25 -30 வருடங்கள் கலைத் துறையில் இருக்கும் இவர் நடித்த முதல் படம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாசமலர் என்ற மிகப் பெரும் வெற்றி பெற்ற சில்வர் ஜுபிலி படம். இவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களால் கிடைத்து இருக்கிறது. இன்று வரையில் அவரை தன் தெய்வமாகவே மதித்து வருகிறார். ஏற்கனவே நடித்து இருந்தாலும் 1972 ஆம் வருடம் ஜெய்ஷங்கர்,லக்ஷ்மி நடிப்பில் வெளியான மாணவன் என்ற படம் தான் இவரது முதல் திரைப் படம் என்று இவர் கருதுகிறார். அதில் இவர் காத்தாடி ராமமூர்த்தி, பாண்டு போன்றவர்களுடன் ஜெய் ஷங்கரின் நண்பர்களில் ஒருவராக நடித்து இருக்கிறார். இவருக்கு வெள்ளை சுப்பையா என்ற பேரே சாண்டோ வைத்தது தான்.
அந்த டூரிங் டாக்கீஸ் ஓனர் கோபிச் செட்டிப்பாளயத்தை சேர்ந்தவர். அப்போது அங்கிருந்தபடியே பல படம் பார்த்திருக்கிறார்.அப்போது பெரும் கூட்டம் கூடிய நடிகர் திலகத்தின் பராசக்தி படத்தில் அவரின் வசன உச்சரிப்பைப் பார்த்து நடிக்க ஆசைபட்டிருக்கிறார்.அந்தியூர் தேவி நாடக சபா ஓனரான கே.எம்.ரத்தினப் பிள்ளை அவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். இவ்வாறு ட்ராமாக்களில் ஐக்கியம் ஆன இவர் மொத்தம் 63 பேர் கொண்ட நாடகக் குழுவில் பல நாடகங்கள் நடித்து உள்ளார். அங்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட நடனம், பாட்டு அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.
பிறகு அங்கிருந்து மெட்ராஸ் வந்து லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா,எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ஆர்.எஸ்.மனோகர் போன்றவர்களுடன் மூன்று வருட காலம் மேடையில் நடித்து இருக்கிறார்.அப்போது இவர் நாடகத்தின் மேல் தீராத காதல் கொண்ட பைத்தியமாக அலைந்து இருக்கிறார். அப்போது எஸ்.வி.சகஸ்ர நாமம் அவர்கள் நடத்திய ட்ரூப்பிலும் நடித்து இருக்கிறார்.
இவர் பல படங்கள் நடித்திருந்தாலும், இவரை பலருக்கு அறிமுகப் படுத்தியது, அறிமுகப் படுத்திக்கொண்டிருப்பது ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உண்டான வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் வெளிவந்த "மேகம் கருக்கையிலே" என்ற பாடல் தான்.பாண்டி பஜார் ஷாப்பிங்ல இருந்த போது ஒரு லண்டன் நண்பர் இவரை பார்த்து "நேத்து தான் உன்னை லண்டனில் பார்த்தேன்." என்றாராம். பேந்த பேந்த முழித்த இவரிடம் "ஆமாங்க நேத்து தான் டி.வி ல உங்கள் பாட்டை பார்த்தேன். அந்த பாடலில் நடித்தது நீங்க தானே" என்றாராம்.இப்படி இந்த பாடல் அவருக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்ததாக கூறுகிறார். அந்த பாடல் உங்களுக்காகவும்.
Popout
Popout
ஒரு காலத்தில் தேனாம்பேட்டையில் இவர், அண்மையில் மறைந்த இசை அமைப்பாளர் சந்திர போஸ், தேவா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோர்கள்
ஒன்றாக வசித்து இருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் அனைவரும் சங்கிலி முருகன் இருந்த லாட்ஜில் அறை எண் 92 -சியை ஞாபகம் வைத்திருக்கிறார். இன்று சாலிக்ராமம் பங்களாவில் இவர்கள் குடியிருந்தாலும் அந்த இனிமையான நாட்களை என்றும் அவர்கள் மறக்க மாட்டார்கள், இன்றும் நினைச்சுப் பார்ப்பார்கள் என்கிறார்.
இவரை சென்டிமேன்ட்டுக்காக பல படங்களில் ஒரு சீன், அரை சீன் காட்சிகளில் நடிக்க கூப்பிட்டாலும் உடனே சம்மதிப்பாராம்.இயக்குனர் தரணி இவரை அனைத்துப் படங்களிலும் நடிக்க அழைப்பதாக கூறுகிறார்.தற்போது கே.வி ஆனந்தின் இயக்கத்தில் உள்ள கோ படத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியலையும் விட்டு வைக்கவில்லை. சன் டி.வியில் தங்கம், ராஜ் டி,வியில் வீட்டுக்கு வீடு, கலைஞர் டி.வியில் செண்பகமே போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இப்படி பட்ட ஆடம்பரம் இல்லாத, கொடுக்க்கரத்தை வாங்கிட்டு நடிக்கும், எளிமையான ஒரு கலைஞனை பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
கண்டிப்பா மீண்டும் எதாச்சும் பினாத்த வருவேன்.இவ்வளவு நேரம் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி.
Labels:
அனுபவம்
பயணம்- இந்த வார்த்தை என்னைப் பொறுத்தவரை மந்திரச் சொல். ஒவ்வொரு நாளும் நம்மை நமது உலகை புதுப்பிக்கவல்ல ஒரு மந்திரச்சொல் தாங்க அது. சற்று யோசிச்சு பாருங்க, வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது? அழுதுகொண்டே பிறப்பதிலிருந்து இறந்து பிறரை அழவைப்பது வரை. இங்கே கொஞ்சம் கவனித்தீர்களா? நமது வாழ்வின் விசித்திரம் நாம் பிறக்கையிலே நம்முடன் தொடங்கிவிடுவதை. ஆம் நாம் பிறக்கும் போதே அழுது கொண்டு பிறந்தால் தான் நம்மைப் பெற்ற தாயின் முகம் மலர்கின்றது. அந்த அழுகைச் சத்தம் தான் பிரசவ வார்டின் வெளியே சிந்தனையுடன் நடந்து கொண்டிருக்கிற தகப்பனால் ஒரு நல்ல முடிவை தெரிந்து கொள்ள உதவுகின்றது. ஆனால் அரிதாக ஒரு சில தருணங்களில் அப்படி அழாமல் குழந்தை பிறக்கும் போது தகப்பனின் அந்த நொடியை சற்று சிந்தித்து பாருங்கள்.அழாமல் பிறந்த குழந்தை என்றால் அநேகமாக அது பிறக்கும் போதே இறக்கின்ற குழந்தையாக தான் பெரும்பாலும் இருக்கும்.
பயணம்- இது பட விமர்சனம் இல்லீங்கோ

அதே சமயம் அதற்கு நேர்மாறாக ஒரு மனிதன் இறக்கின்ற போது பாருங்கள்...அவன் சிரித்துக் கொண்டே இறந்தாலும் கூட அவனை சுற்றியுள்ள மனிதர்களுக்கு அவனது திடீர் பிரிவு அழுகையும் சோகத்தையுமே உண்டாகுகிறது. எனவே பிறக்கும் போதே நமது இறப்பும் நிச்சயம் ஆகிவிட்ட இந்த நிச்சயமற்ற வாழ்க்கையிலேயே நம்மை ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு தூண்டுகோலாக பிடிப்புடன் கொண்டு செல்லுவது தான் பயணம்...வாழ்க்கைப் பயணம். அதைப் பற்றிய எண்ணங்கள் தான் இந்த இடுகை.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிரச்சினை இருக்கும். அவன் பிறந்த,வளர்ந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதை பிரிக்கலாம். ஆனால் உண்மையிலேயே சொல்லப் போனால் பிரச்சினை என்றே ஒன்று கிடையாது.நாம் செய்கின்ற காரியத்தால் நம்மால் உருவாக்கப் படுகின்றவையே பிரச்சினைகள். ஏழைகளுக்கு அன்றாட வாழ்க்கையே ஒரு பிரச்சினை தான்.அவனுக்கு தேவை எல்லாம் பசி தீர்க்க உணவு, இருக்க இடம், உடம்பை மறைக்க மானத்தை காக்க இரண்டு செட் உடை, அவ்ளோ தான். இதுவே வசதி உள்ளவனுக்கு அனைத்துமே கவுரவம் சார்ந்த விஷயங்கள் ஆகிவிடுகின்றது.உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அவன் மேன்மையானவற்றைத் தேடி அலைகின்றான். இதில் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பது நடுத்தர வர்க்கத்தினர் தான்.
இப்படிப் பட்ட வாழ்க்கையில் பயணிப்பதே ஒரு சுவாரசியமான விஷயம் தான். பயணங்களின் மூலம் தான் நம் மனம் பக்குவப் படுகின்றது. பயணத்தைப் போல ஒரு உற்ற தோழன் யாரும் கிடையாது. பயணத்தின் போது நம் கூடவே இன்னொரு உயிரும் கை கோர்த்து கொள்ளும் போது தான் நாம் இன்னும் பக்குவம் அடைகின்றோம். அந்த இன்னொரு உயிர் பெரும்பாலும் மனைவியாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கும்.
தனியே பயணிப்பது தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.நம்மில் தொலைந்து போன, நாம் தொலைத்த விஷயங்களை மீட்டெடுக்க என்னால் பயணிப்பதன் மூலமே முடிகின்றது. அடுத்த நாள் வாழ வேண்டும் என்ற புத்துணர்ச்சியை கொடுக்கின்றது. மிக முக்கியமாக நம்மைப் பற்றி நன்றாக புரிந்து கொள்ள உதவுகின்றது தனிமைப் பயணம். அது நமது பலம்,பலவீனங்களை எடை போட, சோதித்து கொள்ள உதவி செய்கின்றது.
நான் என்னை பக்குவ படுத்திக் கொள்ள பலமுறை சேலம் - சென்னை வழிகளான உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையும், வேலூர் நெடுஞ்சாலையும் உபயோகப் படுத்தி இருக்கிறேன்.
அனைவரும் மன்னிக்கவும் இப்போ கொஞ்சம் சுயபுராணம் பாட வேண்டியிருக்கிறது. நான் அவ்வாறு பயணம் மேற்கொண்ட தருணம், காதல் தோல்வியாலும், குடும்ப சச்சரவுகளாலும் மிகவும் துவண்டு போய் என்னை நானே தேடிக் கொண்டிருந்த சமயம். பத்துக்கு எட்டு அறையில் தனியாக சென்னையில் வாழ்க்கை. என்ன ஏது என்று கேட்க கூட யாரும் அருகில் இல்லாத சுதந்திரம். ஆலோசனை சொல்லவோ தேற்றவோ அருகில் யாரும் கிடையாது. அப்போது கூட எனக்கு கை கொடுத்தது எனது பைக்கும் நான் மேற்கொண்ட பயணங்களும் தான். பைத்தியம் போல பல இடங்களுக்கு பைக்கிலேயே நெடுந்தூரம் பயணித்து இருக்கிறேன். பெரும்பாலும் அவற்றுள் எங்கு போகிறோம் எதற்கு போகிறோம் என்ற இலக்கில்லாத பயணங்கள்.இப்போது பதிவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் கூட அப்படி ஒரு காட்சி வரும்.
அப்படிப்பட்ட பயணங்களில் தான் எத்தனை சுவாரசியங்களை நான் கண்டிருக்கிறேன். போகும் வழியெங்கும் வாழ்க்கையின் இரண்டே சாரர்களை பார்க்கலாம். ஒன்று மகிழ்ச்சியாக பயணிப்பவர்கள். மற்றவர்கள் முகத்தில் ஏதோவொரு சோகத்தை அப்பிக் கொண்டு பயணித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் எந்த பிரிவையும் சாராமல் போய்க்கொண்டிருப்பேன். அதனால் தான் என்னவோ என்னால் பல அறிய விஷயங்களை புரிந்து கொள்ள முடிந்தது என்று நினைக்கிறேன்.
ரோட்டுக்கடை, பரோட்டா லாரி டிரைவர்கள், இருசாரார் மனிதர்களின் இரவு வாழ்க்கை, விபத்து, நசுங்கிய வாகனங்கள்,ரத்த வாடை,சாவு,அதைப் பார்த்துக் கொண்டே தொடரும் பயணம், அதீத தூசு, புகை, இயற்கை சீற்றங்கள் (ஒரு முறை ஊத்தங்கரை அருகே நான் செல்லும் போது அடித்த மழையிலும்,காற்றிலும் எனக்கு பத்தடிக்கு முன்னே மரம் சரிந்து விழுந்தது. அப்போது உணர்ந்தது எல்லாம் இந்த இயற்கையின் முன்னே ஒரு தூசி தான் நான் என்று), சகிப்புத்தன்மை,பல புதிய முகங்களின் நட்பு,அவர்களின் அனுபவங்கள் - இப்படி பல விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். என்ன தான் நாம் காரிலோ, பஸ்சிலோ பயணம் செய்தாலும் தனியே இவ்வாறு பைக்கிலே பயணம் செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை தனிமையை தேடி அலைபவர்களுக்கும், தன்னை தேடி அலைபவர்களுக்கும் மிகவும் பொக்கிஷமானது தான்.
தளபதி படத்தில் ஒரு வசனம் வரும், " எனக்கு சோறு போட்ட இங்க இருக்குற அத்தனை பேரும் என் அம்மா தான்" என்று. அதை நான் இந்த பயணங்களின் போது உணர்ந்து இருக்கிறேன்.
அடுத்து கூட்டுப் பயணம். இது தனிமை விரும்பிகளுக்கு பிடிக்காது என்றாலும், அவர்கள் இந்த பயணத்துக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வல்லவர்கள். இதில் பெரும்பாலும் நாம் குழு மனப்பான்மையையும், அடுத்தவரின் விருப்பு வெறுப்புகளுக்கு மரியாதையை கொடுப்பதையும், கருத்துப் பரிமாற்றத்தையும், அதீத சகிப்புத்தன்மையையும், அடுத்தவரின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதையும் கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக நம்மை நம்பி இன்னும் சில ஜீவன்கள் இருக்கின்றது என்ற நினைப்பே நமக்கு பாதுகாப்பு உணர்வை அதிகப் படுத்தி ஒழுங்காக வாகனத்தை ஓட்ட வைக்கும்.
ஒரு பயணம் ஒரு மனிதனின் மனதை எப்படி எல்லாம் மாற்றும், பக்குவப் படுத்தும், அவன் பழகிய மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்க வைக்கும் என்பதற்கு அன்பே சிவம் படத்தில் வரும் கமல்-மாதவன் ஒரிசா-சென்னை பயணங்கள் உதாரணம். எனக்கும் ஒரிசா அனுபவம் உண்டு. அது ஒரு பெரிய பழைய கதை. ஏற்கனவே எனது பழைய வலைப்பூவில் எழுதி இருந்தேன். மீண்டும் நேரம் வரும் போது சொல்கிறேன்.இப்படிப் பட்ட பல நல்லது தரும் பயணத்தை நாம் பணம் செலவழிகின்றது என்று பாராமல் அடிக்கடி செய்வோம்.நம்மை நாமே புதுபிப்போம். பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி!!!
Subscribe to:
Posts (Atom)