ப்ரெட்டி வுமன் …
நான் சமீபத்தில் மிகவும் ரசித்த திரைப்படம். பொதுவாக நான் ஆங்கிலப் படங்கள் மற்றும் பிற மொழிப்படங்கள் பார்ப்பது இல்லீங்க. மொழிப் பிரச்சினை மற்றும் ஆர்வம் இல்லாததும் காரணம். மேலும்
எனக்கு பாண்டஸி வகை படங்கள் என்றால் இப்போதெல்லாம் சுத்தமாகப் பிடிப்பதில்லை. சிறு வயதில் ரசித்த பல பாண்டஸி படங்கள் இப்போது
பார்க்கும் போது ஒன்று அலுப்படைய செய்கிறது இல்லை இதையா அப்படி ரசித்தோம் என்று சிரிப்படைய செய்கிறது.
சில நாட்களுக்கு முன் நள்ளிரவு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருக்கும் போது தான் எதேச்சையாக ஸ்டார் மூவிஸில் இந்த படத்தை பார்க்க நேரிட்டது. ஜூலியா ராபர்ட்ஸ் வரும் ஒரு அஜால் குஜால் சீனில் தான் நான் சேனல் மாற்றுவதையே நிறுத்தினேன். ஆனால் பின்பு தொடர்ந்து வந்த காட்சிகள் என்னுள் உண்டான காமத்தை செயலிழக்க செய்ததோடு இல்லாமல் நல்ல படத்தை பார்த்த திருப்தியை தந்து விட்டது. இத்தனை நாள் இந்த படத்தை பார்க்காமல் விட்டு விட்டோமே என்றும் எண்ணத்தோன்றியது.
1990 இல் வந்த ரொமாண்டிக் காமெடி படம் என்று விக்கிபீடியா கூறினாலும் என்னைப் பொறுத்த வரை இது ஒரு மிகச்சிறந்த பீல் குட் மூவி ஆகும். 464 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது இப்படம். இதில் நடித்ததற்காக ஜூலியா ராபர்ட்ஸ் கோல்டன் க்ளோப் விருதை பெற்றிருக்கிறார். இதெல்லாம் நான் படம் பார்த்த பிறகு தெரிந்து கொண்ட தகவல்கள்.
சரி அப்படியென்ன இந்த படத்தில் இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.
படத்தின் நாயகன் ஒரு மிகப்பெரும் வியாபாரி. பெரும் பணக்காரன். நாயகியோ விபச்சாரத்தை தொழிலாக கொண்டவள்.ஹீரோ வேலை நிமித்தமாக லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது நாயகியை சந்திக்கிறான். பிறகு அவள் விபச்சாரி எனத் தெரிந்த பின்பு ஒரு இரவுக்கு பேரம் பேசுகிறான். இரவு முழுவதும் அவளிடம் பேசிக்கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அவளோ “நீ கொடுத்த பணத்துக்கு அனுபவிச்சுடு. நேரம் குறைந்து கொண்டே போகிறது” என்கிறாள். அதற்கு நாயகன் “நீ என்னுடன் ஒரு வாரம் தங்க முடியுமா?” என்று கேட்க, நாயகி பேரம் பேச, இறுதியில் 3000 டாலர்களுக்கு ஒத்துக் கொள்கிறாள். இந்த ஒரு வாரத்தில் இருவருக்குள் நடக்கும் மன மாற்றங்கள் மற்றும் போராட்டங்கள் தான்கதையே.
ஜூலியா ராபர்ட்ஸின் நடிப்பு அபாரம். ஒரு துணி கடையில் அவரை அவமானப் படுத்தி அனுப்பும் பணிப்பெண்ணிடம் அடுத்த நாள் அதே துணிக் கடைக்கு சென்று “நீ நேற்று மிகப் பெரிய வியாபாரத்தை இழந்து விட்டாய்!” எனும் போதும், தன்னை அனைவரும் வேறு மாதிரி பார்கிறார்கள் என்று உணர்ந்து அழும் போதும் கலக்குகிறார்.
ரிச்சர்ட் கேரே தன்னுடைய அமைதியான நடிப்பால் நம்மை வசியப்படுத்தி விடுகிறார். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஹோட்டல் மேனேஜராக வருபவர் தான். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை. உதாரணமாக ஜூலியா ராபர்ட்ஸின் தோழி, ஹீரோவின் வக்கீலாக வருபவர் போன்றவைகள்.
இறுதியில் நாயகனும் நாயகியும் சேரும் விதம் தான் வழக்கமான காட்சியாக அமைந்து விட்டது. இப்படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள் நினைவுகளை அசைபோடுங்கள். இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.
இன்னொரு இடுகையில் என்னைக் கவர்ந்த மற்றொரு படமான “Death at the Funeral” பற்றி எழுதுகிறேன்.
நன்றி, வணக்கம்!

0 ரீலு ஓடிருக்கு..:
Post a Comment