அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ...

 வரும் சட்டசபைத் தேர்தலையும் தற்போது நடந்துவரும் கிரிக்கெட் உலகக்கோப்பையையும் ஒப்பிட்டு பார்த்ததில் வந்த ஒரு ஜாலி கற்பனை இது.இப்போது நான் கூறப்போகும் ஒப்பீடு முழுக்க முழுக்க ஜாலிக்காகவே, யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம். சரி இப்போது என்னவென்று பார்ப்போமா?


தேர்தல்=உலகக்கோப்பை 2011

க்ரூப் ஏ
========

அ தி மு க
தே மு தி க
ம தி மு க
கம்யூனிஸ்ட்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மனித நேய மக்கள் கட்சி
புதிய தமிழகம்
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்
அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம்

க்ரூப் பி
=======

தி மு க
காங்கிரஸ்
பா.ம.க
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
மூவேந்தர் முன்னேற்ற கழகம்
புதிய பாரதம்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம்
பெருந்தலைவர் மக்கள் கட்சி


இந்த முறையும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய சில தலைவர்களையும், நடந்து வரும் கிரிக்கெட் உலகக்கோப்பையில் கவனிக்கப் பட வேண்டிய சில வீரர்களையும் ஒப்பீடு செய்ததில் கிடைத்த சுவாரசியம் உங்களுக்காகவும்.

1 ) ஜெயலலிதா -சேவாக்


எதையும் பரபரப்புடன் செய்து முடிப்பதிலும், அடித்து ஆடுவதிலும் இவர்களை அடிச்சுக்க ஆளில்லை. பயம்னா என்ன? என்று கேட்பவர்கள்.இவர்களைப் பார்த்து எதிர் அணி வீரர்கள் எப்போதும் சிறிது நடுங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. போதிய ஆகப் பூர்வமான உழைப்பை இவர்கள் செய்ததே இல்லை, அது வலைப் பயற்சியோ இல்லை களப் பணியோ. அதை செய்வதற்கு அவசியமே இல்லை என்று திமிரோடு அலைந்தாலும் காலத்தில் வெளுத்து வாங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.


2) கலைஞர் - சில பாகிஸ்தான் வீரர்கள்

அணியில் நல்ல ஊழல் செய்யாத திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும், உள்ளிருக்கும் சில பெருச்சாளிகளை தனது தன லாபத்துக்காக தூண்டிவிட்டு பின்பு விஷயம் வெளியில் தெரிந்து குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் திறமையில் இவர்களை மிஞ்ச ஆட்கள் கிடையாது. அணியில் எப்போதுமே குடும்ப ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும். கம்ரான் அக்மாலுக்கும் அதே தான்...தயாளு அம்மாளின் ஒண்ணு விட்ட பேரனுக்கும் அதே தான். எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் புகார்கள் வந்தாலும் காலத்தில் தனது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள் இவர்கள். போட்டிக்கு முன்பு குழம்பினாலும் போட்டி அன்று சரியான நேரத்தில் தனது ராஜ தந்திரத்தையும் கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்த தெரிந்தவர்கள்.

3 ) கேப்டன் விஜயகாந்த் - விராத் கோலி

துவங்கும் போது அதிரி புதிரியாக எதோ ஏனோ தானோவென்று இருந்திருந்தாலும் இந்தமுறை போட்டிக்கு சரியான திட்டமிடுதலுடன் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். ஏற்கனவே இலவு காத்த கிளி போல அணிக்குள் வர துடித்துக் கொண்டிருந்தவர்களின் வயிற்றில் எரிச்சலை கிளப்பி இருக்கும் நபர்கள் இவர்கள் தான். இவர்களின் இந்த திடீர் எழுச்சி மற்ற அணி வீரர்களை கலங்கடித்ததொடு இல்லாமல் தனது அணியில் வாய்ப்பை தவற விட்ட சிலரையும் எரிச்சல் படுத்தி இருக்கிறது.


4 ) ராமதாஸ் - பிற அணியில் இருக்கும் இந்திய வீர்கள் (எ.கா : வேஸ்ட் இண்டீஸ் சர்வான், சந்தர்பால் )

இவர்கள் அணி மாறும் கலையில் சிறந்தவர்கள். எந்த அணியில் வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி பேர்,புகழ் சம்பாதிப்பவர்கள்.கொள்கை,வெங்காயம் என்று எதுவுமே கிடையாது. ஏனோ தானோ என்று ஆடுபவர்கள். எப்போதாவது வெற்றி பெற்றால் இவர்கள் போடும் கூத்து யாராலும் தாங்க முடியாது.

5 ) வைகோ-டிராவிட்

இவ்விருவருமே ஒரு காலத்தில் தனது திறமையால் கொடி கட்டி பறந்தவர்கள். இன்று யாருமே இவர்களை கண்டு கொள்ளாததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இவர்கள் இன்னும் மீளவே இல்லை. இவர்களின் இன்றைய நிலைமையை அழாகாக விளக்கும் பாட்டு "ஜகமே மந்திரம் மனமே தந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ ஓஓ..."

6 ) ப.சிதம்பரம் - பாண்டிங்

இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். அம்பயரை மிரட்டுவது, ஸ்லெட்ஜிங் போன்றவையை கொண்டுவந்தது என்பது இவர்களின் சாதனைகள். மிரட்டியே ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர்கள். உதார் விடுவதிலும், பேசியே சமாளிப்பதிலும் வல்லவர்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இவர்களுக்கு மிகவும் குறைவே. மிரட்டி நினைத்ததை சாதித்து காட்டுவார்கள் அது 63 சீட்டாக இருந்தாலும் சரி அடுத்த ஆட்ட விக்கெட்டுகளையும் சேர்த்து 63 விக்கெட்டுகள் ஆனாலும் சரி.

7) கிருஷ்ணசாமி - இர்பான் பதான் மற்றும் கார்த்திக் - மொகம்மத் கைப்

இது காணமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு. போட்டி நேரங்களில் பெயர் அடிபடுவதொடு சரி.

8 ) சரத்குமார் - கனடா அணியின் பாலாஜி ராவ்

அணியில் இருப்பதையே தனது வாழ்நாள் சாதனையாக கருதுபவர்கள் இவர்கள். பெரிதாக சொல்லிக்கொள்ள நல்ல பின்புலமோ, அனுபவமோ, அணியோ கிடையாது.

9 ) கம்யூனிஸ்ட் தா.பாண்டியன் - ஸ்டீவ் டிக்கொலோ

ரொம்ப நாளாக அடிக்கொண்டிருந்தாலும், இப்போது வயதாகி விட்ட காரணத்தால் ஆட்டத்திறமை மங்கிபோய் உள்ளது. எதோ இடத்தை நிரப்பும் filler போல இவர்களின் பரிதாப நிலைமை. புதிய வீரர்களின் அணிவகுப்பிலும் அவர்கள் திறமையிலும் சற்று ஆடிப் போய் உள்ளனர்.


10 ) சுயேட்சைகள் - கெவின் ஒ பிரையன்கள்

எங்கேயோ எப்போதோ சோபிக்கும் அபாரத் திறன் படைத்தவர்கள். தனி ஆளாக நின்று சில ஆட்டங்களில் வென்றே கொடுத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போல தான். பெரிதும் கண்டுகொள்ளப் படாமலே சிறு புள்ளியாய் காலப் போக்கில் மறைந்து போவார்கள்.


11) இளையதளபதி விஜய்- அஷ்வின்

இவர்கள் பேரு மட்டும் தான் அடி படும். ஆனால் இவங்க ஆட்டத்திலேயே இல்லை. இதுக்கு மேலே சொல்ல என் கிட்டயும் ஒன்னும் இல்லை.


மீண்டும் இது போல கண்டிப்பா எதாச்சும் பினாத்த வருவேன். பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி.

1 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010