கண்மூடித்தனம் நம்முடையது

நித்தியானந்தா இல்லை இல்லை ராஜசேகர் (அவனது இயற்பெயர்) சமா(அபச்)ச்சாரம் தான் இப்போது தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தலையாய பேச்சாக இருக்கிறது. நானும் அலுவலகத்தில் பார்த்துவிட்டேன், எனது வீட்டின் அருகிலே, தெருவிலே, தொலை பேசும் நண்பர்கள் என அனைவரும் ஒரு நிமிடமாவதேனும் என்னிடம் இவனைப் பற்றி பேசியிருப்பார்கள்.


இப்படி ஒரே ராத்திரியில் ஓகோ என்று அவனை உயர்த்திய சன் டி.வியின் பெருமையை தான் என்னவென்று சொல்வது. இவனுங்க அவனுங்க தயாரிச்ச படத்தையே அஞ்சு நிமிஷத்துக்கு ஒருக்கா விளம்பரம் போட்டு வியாபாரம் என்கிற பேருல சாவடிக்கரவனுங்க. இப்போ அவனுங்களால கூட தயாரிக்க முடியாத ஒரு லோ பட்ஜெட் கில்மா படம் அவனுங்க கையில சிக்கினா விட்டுடுவாங்களா?


"என்னை கொலை பண்றாங்க?!" என்று கலைஞர் இரண்டு நாள் முழுவதும் சன் டி.வியில் கூவியதை மறக்க முடியுமா? செய்தியில் கூவிக் கொண்டிருந்த கலைஞர் பின் விளம்பர இடைவேளையிலும் அவ்வவப்போது வந்து கதறுவதை ஒரு வாரமேனும் அப்போது காட்டியிருப்பார்கள். அரை மணிக்கொரு ஒளிபரப்படும் செய்தியில் பின்னணி இசை, ரீ ரிக்கார்டிங், எடிட்டிங் எல்லாம் காண கச்சித்தாமாக செய்து, சமயத்திற்கேற்ற வர்ணனையுடன் ஒளிபரப்பி, உலகத் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே செய்திகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட சேனலில் ஒரு கில்மா குறும்படத்தை ஒரு நாளைக்கு  48 முறை வீதம் இன்னும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் சன் டி.வியின் சேவை தொடரட்டும்.


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களாம்! வெங்காயம் என்ற பெரியார் உச்சரிக்கும் வார்த்தையை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். எனது சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஒருவேளை தெரிந்தால் சொல்லவும்.


  1. இந்த விஷயம் திடீரென பூதாகரமாக முளைக்க காரணமான அந்த வீடியோ, சன் டி,வியில் மட்டும் பிரதானப்படுத்தி ஒளிபரப்பப்படுவது ஏன்?
  2. மூன்று மாதம் முன்பு எங்கள் அன்புத் தலைவி புவனேஸ்வரியை கைது செய்த காவல் துறை, இனிமேல் அனைத்து நடிகைகளும் தீவிரமாக கண்காணிக்கப் படுவார்கள் என்று உரைத்த காவல் துறை, இந்த அரைக் கிழவி ரஞ்சிதாவை இன்னமும் கண்டு கொள்ளாதது ஏன்?
  3. ஒருவேளை தமிழக அரசிடம் நம்ம கவர்ச்சிப் புயல், சம்மர் சால்ட் நாயகன் நித்தி ஏதேனும் உரண்ட இழுத்துவிட்டாரோ? எலிக்கு வடை வெச்சு புடிக்கிற மாதிரி நம்ம நித்திக்கு வடை அடச்சே! சாரி ஜடை வெச்சு புடிச்சிட்டாங்களோ? 
  4. இல்லை இருக்குற பப்ளிசிட்டி போதலைன்னு நம்ம நித்தி அவரே படத்தை இயக்கி, தயாரிச்சு திரையிட இப்போ பல்லாவரம் ஜோதி தியேட்டர் கூட இல்லாததால் தானே சன் டி.விக்கு விழிப்புணர்ச்சியை மக்களுக்கு கற்றுக் கொடுக்க அனுப்பி விட்டாரோ?
  5. அவரோட முழுப்படமும்  டி.வியில போடாததனால மூர் மார்க்கெட்ல முழுப் படமும் கொண்ட சி.டி வாங்க நேற்று வரலாறு காணாத கூட்டத்தை கூட்டி விட்டனர் எப்போதும் அடுத்தவன் சு..**யின் அளவை பொது கக்கூசில் எப்போதும் எட்டிப் பார்க்கும் நம்ம பச்ச,மஞ்ச,சிவப்பு, தமிழன்கள்.
  6. மாத மாதம் ஒரு கில்மா மேட்டர் எப்படி இவர்களுக்கு கிடைக்கிறது. ஒருவேளை ஒரு மாதத்திற்கு போணியாக வேண்டியதை இது போன்ற சம்பவங்களை முன்னிறுத்தி இரண்டே நாளில் லவட்டிக் கொள்ளவோ?
  7. தினகரன் என்ற ஒரு நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் படங்கள் என்னமோ அவர்களே நேரில் சென்று எடுத்தது போல அத்தனை க்ளாரிட்டியுடன் இருக்கிறது. நக்கீரன் இதழ் நேற்று முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டதாம். இந்த அஞ்சு நிமிஷ மேட்டரை ஐந்து பக்க கவர் ஸ்டோரியாக விவரித்து எழுதியிருப்பதை பலரால் படிக்க முடியவில்லையாம்! தமிழக அரசு இவர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் அளிக்கப் போவதாக செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.
எப்போதும் எவனையாச்சும் சாமியார்னு நம்புவதும் அவன் ஏதாவது ஏடாகூட மேட்டருல மாட்டிக்கிட்ட அவனை சும்மா ஒரு மாசம் துரத்தி துரத்தி அடிப்பதும் பின் மறந்துவிட்டு வேறு ஒரு சாமியை தலையில் வைத்துக் கொண்டாடுவதும், அடுத்தவனின் அந்தரங்கத்தை அறிந்து கொள்ள அலைவதும் என்று நினைத்தால் நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.


நித்தியிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பால பாடம்: நாதாரி தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்!

0 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010