உன் குறுந்தகவலுக்கு
உடனே பதில் தராததால்
உண்டாகும் ஊடல்
இறுதியில்
குறுந்தகவலின் மூலமே
முள்ளை முள்ளால் எடுப்பதாய்
முடிவது அழகு!
அந்த நீளமான
அர்த்தமற்ற
தகவல் பரிமாற்றம்
அர்த்தமாக்குகிறது
ஒவ்வொரு ராத்திரியையும்...
குவார்ட்டரை தாண்டி
மூன்று ரவுண்டு
முடிந்த நிலையில்
உட்கொண்ட
முட்டை பரோட்டாவின்
வேதி வினையில்
வந்த வாந்தியின்
மறுவிளைவில்
எழுந்த
இனி குடிக்க மாட்டேன்
என்ற சபதம்
மறுநாள் மாலையில்
மற்றொருமுறை
உடைபடுவதைப் போல
உடைபடுகிறது
என்னுடன்
உன் ஊடலும் கூட!

0 ரீலு ஓடிருக்கு..:
Post a Comment