பிக்கப்பு-ட்ராப்பு-எஸ்கேப்பு




"என்னப்பா சொல்ற?" அதிர்ச்சியின் உச்சத்தில் சுசியின் குரல் நடுங்கியது.


"ஆமா!நான் உண்மையா தான் சொல்றேன்.நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது.பேசாம நாம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்.அதான் நல்லது" என்றான் தருண்.

"ஹே!சும்மா விளையாடாத...எப்பப் பார்த்தாலும் உனக்கு விளையாட்டு தான்..." என்று செயற்கை புன்னகையை முகத்தில் வரவழைத்து சொன்னாலும் அவள் முகத்தில் சிறு கலக்கம் இருந்தது.

"ஆமா, நீ என் மாமன் பொண்ணு பாரு..உன்கிட்ட விளையாடுறது தான் எனக்கு வேலை.நான் சீரியஸா தான் சொல்றேன்.நம்ம ரெண்டு பேரும் இதோட பிரிஞ்சுடலாம்"

"அதான் ஏன்? டேல் மீ ஒன் குட் ரீசன். இவ்ளோ நாள் நல்லா தான் போச்சு. நல்லா தான பழகினோம். இப்போ மட்டும் என்ன திடீர்னு? நான் எதாச்சும் தப்பு
பண்ணிட்டனா? எதுனாலும் சொல்லு நான் திருத்திக்கிறேன். ஐ நீட் யு டா!!! ஐ லவ் யூ சோ மச் டா!!!" என்று கூறியவளின் குரல் உடனே உடைந்தது. உடம்பு குலுங்கியது..கண்களில் நீர்த்திவலை.



"இல்ல சுசி..எனக்கு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு...பட் சொல்லி தான் ஆகணும்.உன் மேலே எனக்கு எந்த கோபமும், வெறுப்பும் இல்ல. வீட்டுல நம்ம லவ் விஷயத்தை பத்தி சொன்னேன். உங்க வீட்டுலயும் பிரச்சினை. அந்த பொண்ணு அவுங்க வீட்டுல முதல்ல பேசட்டும், அப்புறம் பார்க்கலாம் என்று ரெண்டு மாசம் முன்னாடி சொன்னவங்க,இனிமே அதைப் பத்தி எங்க கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டாங்க.யோசிச்சு பார்த்தேன்.அவங்க சொல்றதுலயும் சில நல்ல விஷயங்கள் இருக்கு. அதான்..." என்று இழுத்தான் தருண்.


"அப்போ இவ்ளோ நாள் என்னை நீ உண்மையாவே லவ் பண்ணல இல்ல. ஊர் சுத்துறதுக்கும், உடம்பை தடவுறதுக்கும் தான் உனக்கு நான் தேவைப் பட்டிருக்கேன். அதெப்படி டா எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க? ஒ.கே இனிமே என் முகத்துலேயே முழிக்காத...நான் எப்படியோ தொலைஞ்சு போறேன்.குட் பை" என்று கூறியவுடன் அவனை திரும்பிகூட பார்க்காமல் சென்று விட்டாள்.


இரவு 8 மணி, சென்னையில் ஒரு டாஸ்மாக்கில்...


"மாப்ள, எப்படியோ சில ஐடியாக்களை யோசிச்சு, சில சினிமா வசனம் எல்லாம் மிக்ஸ் பண்ணி எப்படியோ சுசியை கழட்டி விட்டுட்டேன் டா, சோ உனக்கு இன்னிக்கு ட்ரீட்.எவ்ளோ வேணும்னாலும் குடிச்சுக்கோ. ஐ ஆம் வெரி ஹாப்பி." என்றான் தருண் தன் நண்பன் ஹரியிடம்.


"ஆமாம் டா. இப்போ தான் உன் கிட்னியை யூஸ் பண்ணி ஒரு நல்ல காரியம் பண்ணிருக்கே. இதுல ட்ரீட் வேற.இப்போ அடுத்து நீ வேற தாரிகான்னு ஒரு பொண்ணை லவ் பண்றதா சொல்லிக்கிட்டு இருக்க. அதையும் இதே மாதிரி மேட்டர் முடிச்சதும் கழட்டி விடப் போறியா?"


"மச்சி என்னடா சொல்ற...தாரிகா சுசிய விட செம அழகு டா...செம ஹோம்லி, செம ஸ்ட்ரக்சர், லவ்லி கேள் டா அவ...அவளைப் போய் கழட்டி விடுவேனா நான்? நல்லா நோட் பண்ணிக்கோ அவள் தான் எனக்கு இல்லத்து அரசி..."


"ஆமா இப்படி தான் சுசியை பார்க்கும் போதும் இதே டையலாக் விட்ட...நீ காமிச்ச தாரிகவை விட சுசி கொஞ்சம் கலரும், அழகும் கம்மி தான் டா. ஆனா அது தான் இயல்பான அழகு. தாரிகா மேக் அப் கலைச்சா எப்படி இருப்பாளோ? சரி எனக்கென்ன அதைப் பத்தி கவலை. அது உன் பாடு? ஆனா ஒரே ஒரு கேள்வி மாப்ள, அதெப்படி டா எல்லா பிகர்களும் என்ன மாதிரி நல்ல பசங்களை எல்லாம் விட்டுட்டு உங்களை மாதிரி கேரக்டர் கிட்ட உடனே விழுந்துடுறாங்க?"


"அதுக்கு எல்லாம் திறமை வேணும் டா..உனக்கு எதுவும் இன்னும் மடங்கலைன்னு பொறாமைல பேசாதே...தண்ணியை குடி தண்ணியை குடி..."


"ஆமாம் டா. நீ செஞ்சுட்டு இருக்கிற கேடு கெட்ட காரியத்துக்கு நண்பன் ஆச்சேன்னு ஒத்து ஊதுறேன் பாரு..நீ ஏன் சொல்ல மாட்ட?"


"மாப்ள கோச்சுக்காத டா. அவனவன் ஆறேழு பிகரை கழட்டி விட்டுட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி சுத்துறாங்க...நான் இப்போ தானடா ஆரம்பிச்சு இருக்கேன். அது என்னமோ தெரியல, சுசியை விட தாரிகா பெட்டரா தோனுச்சு அதான். ஆனா நீ சொல்றதும் சரி தான். நான் ரொம்ப கேவலமா போய்கிட்டு இருக்கேன். சுசி இன்னிக்கு சாயந்திரம் நான் அவளை லவ் பண்ணலைன்னு சொல்ல சொல்ல பயங்கரமா அழுதா டா...பாவம் டா சுசி..."


மப்பு மண்டைக்கேற உளற ஆரம்பித்த தருண் ராவாக குவார்ட்டர் பாட்டிலை கவுத்த முயற்சித்து மட்டை ஆனான்.சுயநினைவு இழந்த தருணத்திலும் அப்போது அவன் வாய், 'சுசி! சுசி!' என்று உளறுவதை கவனித்த ஹரி, "என்ன ஜென்மமடா நீங்க எல்லாம்?உங்களை எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா?நாய்க் காதல் பண்ற நாய்ங்களா.." என்றான்.


அதே நாள் இரவில், தி.நகர் கேள்ஸ் பி.ஜி ஒன்றில்,


"என்னடி சுசி? இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியுது? உன் ஆளு கூட ஊரு சுத்திருப்ப போல இருக்கே" என்றபடியே சுசியிடம் கேட்டவாறு அறையில் நுழைந்தாள் அவள் தோழி மலர்விழி.


"ஆளா? அவன் எல்லாம் ஒரு ஆளா? அவன் மூஞ்சும், முகரையும்...ஓட்ட டூ வீலர் ஒன்னை வெச்சுகிட்டு அவன் கொடுக்குற சீன் இருக்கே...எதோ அவன் கூட சுத்துனதுல நல்லா டைம் பாஸ் ஆச்சு...ஓசியில நல்லா ஊரை சுத்துன மாதிரியும் ஆச்சு.நம்ம வேலைக்கு வெச்ச ஆளுங்க கூட இப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க..அதுனால நானும் கொஞ்ச நாள் ஓட்டிகிட்டு இருந்தேன். எப்போ பிரஷாந்த் என்னை கார்ல பிக் அப் பண்ணானோ அப்பவே அடுத்த காதலும் பிக் அப் ஆயிடுச்சுடி...நானா எப்படி தருணை கழட்டி விடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். இன்னிக்கு அவனே முந்திக்கிட்டான். சும்மா அழுவுற மாதிரி ஒரு சின்ன பெர்பார்மன்ஸ் கொடுத்துட்டு வந்துட்டேன்.இனிமே அவனா வந்து மறுபடியும் தொல்லை பண்ணா கூட அவனை ஈவ் டீசிங்க்ல மாட்டி விடுறதுக்கு என் பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கு. எப்படியோ இப்ப தான் நான் சந்தோஷமா இருக்கேன்" என்றால் சுசி.


ஆனால் பாவம் ஹரிக்கும் சரி, தருணுக்கும் சரி இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

11 ரீலு ஓடிருக்கு..:

  1. Ram said...:

    எல்லாத்திலயும் எனக்கு தான் வடை

  1. Ram said...:

    யோவ்.! வெரிஃபிகேஷன எடுயா...

  1. தம்பி கூர்மதியன்
    March 19, 2011 11:59 AM
    யோவ்.! வெரிஃபிகேஷன எடுயா...//

    கடை புதுசுல அதான்.இப்போ எடுத்துட்டேன்...

  1. Ram said...:

    உன் ப்ளாக்க அழிச்சது சரிதாம்யா..

    அழிச்ச ப்ளாக்க திரும்ப உருவாக்குறன்னு இதுல கூட மீள்பதிவு போடுறியே.!!!

  1. அழிச்ச ப்ளாக்க திரும்ப உருவாக்குறன்னு இதுல கூட மீள்பதிவு போடுறியே.!!!//

    இல்ல தல...நாம எழுதியதை பத்திரமா வெச்சுக்கனும்ல...அதேன்...

  1. "ஆமா, நீ என் மாமன் பொண்ணு பாரு..உன்கிட்ட விளையாடுறது தான் எனக்கு வேலை.நான் சீரியஸா தான் சொல்றேன்.நம்ம ரெண்டு பேரும் இதோட பிரிஞ்சுடலாம்"//

    என்னது மாமன் பொண்ணுகிட்ட மட்டும் தான் விளையாடுவீங்களா:))

  1. இல்ல சுசி..எனக்கு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு...பட் சொல்லி தான் ஆகணும்.உன் மேலே எனக்கு எந்த கோபமும், வெறுப்பும் இல்ல. வீட்டுல நம்ம லவ் விஷயத்தை பத்தி சொன்னேன். உங்க வீட்டுலயும் பிரச்சினை. அந்த பொண்ணு அவுங்க வீட்டுல முதல்ல பேசட்டும், அப்புறம் பார்க்கலாம் என்று ரெண்டு மாசம் முன்னாடி சொன்னவங்க,இனிமே அதைப் பத்தி எங்க கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டாங்க.யோசிச்சு பார்த்தேன்.அவங்க சொல்றதுலயும் சில நல்ல விஷயங்கள் இருக்கு. அதான்..." என்று இழுத்தான் தருண்.//

    what do you mean bro? It's can't be a good reason?
    அட் சும்மா ஒரு தமாசுக்கு இங்கிபீசிலை எழிதினன். என்ன வீட்டை சம்மதிக்கவில்லை என்று பிரிவா. அருமையான காரணம் கண்டு பிடிச்சிருக்கிறீங்க.
    இவ் இடத்தில் தகுந்த காரணத்தைக் காட்டாத கதாசிரியரைக் கண்டிக்கிறேன்.

  1. "அப்போ இவ்ளோ நாள் என்னை நீ உண்மையாவே லவ் பண்ணல இல்ல. ஊர் சுத்துறதுக்கும், உடம்பை தடவுறதுக்கும் தான் உனக்கு நான் தேவைப் பட்டிருக்கேன். அதெப்படி டா எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க? ஒ.கே இனிமே என் முகத்துலேயே முழிக்காத...நான் எப்படியோ தொலைஞ்சு போறேன்.குட் பை" என்று கூறியவுடன் அவனை திரும்பிகூட பார்க்காமல் சென்று விட்டாள்.//

    இது Real, அருமையான வசனக் கோர்ப்பு. உங்களை இவ் இடத்தில் பாராட்டவே வேண்டும். யதார்த்தமான வசனங்களாகத் தெரிகிறது. ஒரு வேளை வாழ்வில் நடந்த சம்பவங்களின் கோர்வையோ?

  1. "ஆமாம் டா. இப்போ தான் உன் கிட்னியை யூஸ் பண்ணி ஒரு நல்ல காரியம் பண்ணிருக்கே. இதுல ட்ரீட் வேற.இப்போ அடுத்து நீ வேற தாரிகான்னு ஒரு பொண்ணை லவ் பண்றதா சொல்லிக்கிட்டு இருக்க. அதையும் இதே மாதிரி மேட்டர் முடிச்சதும் கழட்டி விடப் போறியா?"//

    இன்றைய் இளைஞர்களின் யதார்த்தத்தை அப்படியே படமாக்கியுள்ளீர்கள்.

  1. "மச்சி என்னடா சொல்ற...தாரிகா சுசிய விட செம அழகு டா...செம ஹோம்லி, செம ஸ்ட்ரக்சர், லவ்லி கேள் டா அவ...அவளைப் போய் கழட்டி விடுவேனா நான்? நல்லா நோட் பண்ணிக்கோ அவள் தான் எனக்கு இல்லத்து அரசி..."//

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் நாயகன்..இதில் கதாசிரியரின் உள் கூத்து ஏதும் இல்லையே?

  1. கதையின் இறுதியில் சுசியின் மூலம் இன்று ஊர்களில் நடக்கும் ஒரு சில ஏமாற்று வித்தைகளை அப்படியே எழுத்தோவியமாகத் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோ. இச் சிறுகதை இன்றைய இளைஞர் யுவதிகளின் நடத்தையினைச் சுட்டி நிற்கும் ஒரு காலத்தின் பதிவு.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010