ஐ ஆம் ப்ளைண்ட்

பிப் 14 , காதலர் தினம், ஒரு மேன்ஷன் அறையில்...

"இன்னைக்கு எப்படியாவது சொல்லியே தீருவேன் டா" என்றான் விவேக்.

"டேய் எத்தனை நாளைக்கு தான் டா இதையே சொல்லுவ... புதுசா எதையாசு சொல்லு டா. கேட்டு கேட்டு எனக்கு போர் அடிக்குது" - இது விவேக்கின் நண்பன் ராம்.


"டேய் என்ன நக்கலா...வாந்தியும் பேதியும் அவன் அவனுக்கு வந்தா தாண்டா தெரியும். லவ்வு டா..எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் சாதிச்சுட முடியாது. பொறுமையா தான் எதையுமே பண்ண முடியும். நான் எல்லாம் எவ்ளோ யோசிச்சு இருக்கேன் தெரியுமா?"


"போடாங்..நீ இதைப் பத்தி இவ்ளோ யோசிக்கிறியே, உங்க ஆபிஸ்ல உன்னை அமேரிக்கா போ சொல்லி இன்னையோட மூணு மாசம் ஆகப் போகுது. அதைப் பத்தி யோசிச்சியா?அவனவன் விசா எப்படா கிடைக்கும், எப்போடா ஆன்சைட் அனுப்புவாங்கன்னு தவியா தவிக்கிறான். ஒன்னு மட்டும் கரெக்ட் டா...திங்கத் தெரியாதவனுக்கு தாண்டா பஜ்ஜி கெடைக்குது..."


"அது இல்ல டா.. எத்தனையோ பொண்ணுங்களை பாக்குறோம். சில பேரு பாக்கும் போது மட்டும் தாண்டா நமக்கு இந்த மாதிரி ஒரு பொண்ணு மனைவியா வர மாட்டாளான்னு மனசு ஏங்கும். அதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது?"


"டேய் தினமும் நைட் கே டிவியில 11 மணிக்கு எதாச்சும் மொக்கை படத்தை பாத்துட்டு ஏன்டா இப்படி டைலாக் அடிச்சு எங்களையும் சாவடிக்குற. நல்ல வேலை பகல் நேரம் ஆபிஸ் இருக்கறதால தப்பிச்சேன். ஆனா என்ன இப்படி தான் உன்கிட்ட போன மூணு மாசமா ஒவ்வொரு சனி,ஞாயிறு கிழமைகள்ள மாட்டிகிட்டு இருக்கேன். ஏதோ இன்னைக்காவது வழக்கம் போல வேடிக்கை பார்க்காம மேட்டரை சொல்லிடு. சொல்லாம மட்டும் வந்தே மவனே சங்கு தாண்டா உனக்கு."



"டேய் மண்டையா, இந்த லவ்வர்ஸ் டே எதுக்கு கண்டுபிடிச்சாங்கன்னு இப்ப தாண்டா புரியுது. இதை ஒரு சாக்கா வெச்சுகிட்டு நாமளும் நம்ம லவ்வ சொல்லிடலாம் இல்ல"

"ஆமா இவரு பெரிய ஜி.டி நாயுடு. ஆராய்ச்சி பண்றாரு. மூடிட்டு ஆபிஸ் கெளம்புடா"

காலை 11 மணி, தேநீர் விடுதி,விவேக்கின் அலுவலகம்...


"ஹலோ..மி..மித்..மித்ரா.." தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எப்படியோ பேச ஆரம்பித்தான் விவேக்.

"என்னையா கூப்டீங்க!" -மித்ரா

"ஆமாங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"

"சொல்லுங்க"

"எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாதுங்க. நான் உங்களை விரும்புறேன். உங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். வீட்டுல கூட உங்களைப் பத்தி அம்மா,அப்பா கிட்ட சொல்லிட்டேன். உங்களுக்கும் சம்மதம்னா பேசுறோம்னு சொல்லிட்டாங்க.நீங்க என்ன சொல்றீங்க?"

"ஹலோ என்னங்க. இப்படி காபி சாப்பிடலாம்கிற மாதிரி திடீர்னு சொல்றீங்க. எனக்கு அப்படி எல்லாம் எந்த ஐடியாவும் இல்லீங்க. இனிமே இதைப் பத்தி என் கிட்ட பேசாதீங்க. நான் நாலு வருஷமா சந்தோஷ் என்பவரை லவ் பண்றேன்.நான் உங்களை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணி இருந்தேனா என்னை மன்னிச்சுடுங்க"


"ஒஹ்..அப்படியா? ஆல் தி பெஸ்டுங்க...சாரி நான் எதாவது தப்பா பேசி இருந்தேனா, ஐ ஆம் வெரி சாரி. சாரி அகேன்..." முகம் வெளிறி ஒரு நடை பிணம் போல ஸ்மோகிங் ஜோன் நோக்கி விரைந்தான் விவேக்.


"ச்சே..எவன் டா அவன் சந்தோஷ்? என் வாழ்கையில இப்படி விளையாடிட்டானே. மவனே அவன் மட்டும் என் கண்ணுல பட்டான்... ஆண்டவா அவனை மட்டும் என் கண்ணுல படாம பார்த்துக்கோ. நம்ம நிலைமை இப்படி தனியா புலம்புற அளவுக்கு ஆயிடுச்சே. அவனை சொல்லி குத்தமில்லை. லவ் பண்ணலைன்னு சொல்றாளே அப்புறம் என்ன மயி---க்கு நான் பாக்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்த்து சிரிச்சா? பாபா கன்பார்ம்ட் மா...கீழ்ப்பாக்கம் தான் மா"

நேரம் மாலை 7 மணி, மேன்ஷன் அறை...


"என்னடா, மூஞ்சில சாணி அப்புன மாதிரி உக்காந்துகிட்டு இருக்க?" என்றான் ராம்.

"ஆமாம்டா.வா போயி ஒரு புல் நெப்போலியன் வாங்கிட்டு வரலாம்."

"என்னடா? வந்ததும் வராததுமா சரக்கு வாங்க கூப்பிடுற!!! மேட்டரை ஒப்பன் பண்ணிட்டியா? ட்ரீட்டா?"

"நீ வேற கடுப்பேத்தாதடா, அவ வேற ஒருத்தனை லவ் பண்றாளாம், அந்த நான்சென்ஸ் பேரு சந்தோஷாம்...அவன் மட்டும் என் கைல கெடைச்சான்..."

"விடுறா, இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...பாதில வந்தவ பாதியிலேயே போயிட்டா...இப்ப தாண்டா பிகரை பார்த்ததும் பிரெண்ட்ஷிப் கட் பண்ணுன உங்களுக்கு நண்பனோட அருமை தெரியும். ஓகே நீயே கடுப்புல இருப்ப உன்னை நான் வேற எதுக்கு கடுப்பேத்தனும். வா டாஸ்மாக் போவோம்."


வேளச்சேரி டாஸ்மாக்...மணி இரவு 8 :30 ...


"மனசே சரி இல்ல டா மச்சான். தற்கொலை பண்ணிக்கப் போறேன்."


"என்ன டா சொல்ற?ஒரு பொண்ணு கிடைக்கலங்கறது எல்லாம் தற்கொலைக்கு ஒரு ரீசனா டா?இப்பவாது பேசாம அமெரிக்கா கெளம்பு டா..அங்க போய் வெள்ளைகாரி ஜாரிகளை வொர்க் அவுட் பண்ணு...அதை விட்டுட்டு தற்கொலை பண்ணிக்கப் போறானாம், மூதேவி. அப்படியே சாகணும்னா உங்க ஊருக்கு போயி உன் வீட்டுல சாவு. சாகும் போது கூட அடுத்தவனுக்கு தொல்லை கொடுக்காம சாக மாட்டேங்குறானுங்க

கருமாந்தரம் புடிச்சவனுங்க....சார் நல்லா பாத்துக்கோங்க சார் இவரு காதலன், அவங்க காதலி, ஒருவேளை இவன் லவ் ஓகே ஆயி இவனுக்கு புள்ளை பொறந்து இருந்துச்சுனா அது எந்த ரேஞ்ச்ல இருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க...அது நடக்கறதுக்கு முன்னாடி நான் ஊரை விட்டு ஓடிப் போயிடுறேன்,இல்லைனா மதம் மாறி கன்வெர்ட் ஆயிடுவேன் "


"நிறுத்துடா வெளக்கென்ன.தற்கொலை பண்ணப் போறேன் சொன்னேன். ஆனான் நான் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேனா?"


"என்னா டா இது குழப்புறானுங்களே ...தம்பி நீ பண்ணிகிட்டா அதுக்கு பேரு தற்கொலை இல்லாம என்னவாம்? ஸ்ட்ரைட்டா கம் டு தி பாயின்ட் யா.."


"பொறு டா...சொல்றேன். நான் பண்ணது ஒரு தலை காதல். காதல் தான் சாகும். ஒரு தலை காதல் தோத்து போச்சுன்னா அதுக்கு பேரு தற்கொலை தான. அதான் நான் இனிமேலும் அந்த பொண்ணை நினைக்க போவதில்லை. என் ஒரு தலை காதலை தற்கொலை பண்ணப்போறேன்."


"ஆமா இவரு பெரிய கம்பரு...சிம்பாலிக்கா பேசுறாராமாம்... ஐஸ்ல வெச்ச டெட் பாடி மாதிரி ஒரு உடம்ப வெச்சுகிட்டு நாய்க்கு லவுட்ட பாரு."


"டேய்..ஏண்டா பேச மாட்ட..நீயும் ஒரு பொண்ணை காதலிச்சு அவளும் உன்னை காதலிச்சு அப்புறம் அவ உன்னை கழட்டி விட்டதுக்கு அப்புறம் உன்னோட லவ்வை கொலை பண்ணுவ...ஏன்னா உன்னோடது தறுதலை காதல். புரில இல்ல...ரெண்டு பெரும் காதலிக்கிறேன்னு ஊரை சுத்திட்டு யாரோ ஒருத்தரு கழட்டி விடுறது...அதுக்கு பேரு தான் தறுதலைக் காதல்."


"யப்பா சாமி...இவனை கேக்குறதுக்கு ஆளே இல்லையா...லவ் பெயிலியர் ஆனவன் மாதிரியா பேசுறான். இவனை தேத்தலாம்னு வந்தா , இப்ப இவன் பேச்சை கேட்டதுக்கு அப்புறம் என்னை தேத்தறதுக்கு ஆள் தேவைப்படும் போல இருக்கு. ஒன்னு மட்டும் கன்பார்ம்ட்... லவ் ஜெயிச்சாலும் சரி தோத்தாலும் சரி, எங்களை மாதிரி ஆளுங்களுக்கு எப்பவுமே இந்த நிலைமை தான். முதல்ல என்னா மாறி கேரக்ட்டருங்களுக்கு ஒரு நாள் வெச்சு கொண்டாடுங்கைய்யா...ஐ ஆம் ப்ளைண்ட்..." - போதை தலைக்கேற மப்பில் சரிந்தான் ராம்.

1 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010