காலம் மாறிப் போச்சு ...


"டேய் மச்சி! சீக்கிரம் கெளம்பு டா! பயங்கரமா பசிக்குது."
"இல்ல மச்சி, இன்னிக்கு டீம் லன்ச் எனக்கு. டீம்ல எல்லாரும் அவுட்டிங் போறோம். அதனால அங்க தான் லன்ச்"
"அடப்பாவி!  நேத்து ஒரு காரணம் சொன்ன...இன்னிக்கு ஒரு காரணம் சொல்ற! ஹ்ம்ம் நடத்து நடத்து எவ்வளவு நாளைக்குன்னு பாப்போம்."
டொக்.


ரிசீவரை கடுப்புடன் வைத்துவிட்டு கம்ப்யுட்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் அஜய். அவன் இவ்வளவு நேரம் பேசியது அவனுடன் பணிபுரியும் தருணுடன். தருணும், அஜயும் இந்த சாப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்ததிலிருந்தே நண்பர்கள்.


சேர்ந்த புதிதில் அவர்களின் சர்டிபிகேட்டை சரிபார்க்கும் தருணத்தில் "எக்ஸ்க்யுஸ் மீ! சர்டிபிகேட் இங்க தான் செக் பண்றாங்களா?" என்ற உரையாடலுடன் ஆரம்பித்த இவர்களது நட்பு இன்று வரை தொடர்கிறது.


பழைய நினைவுகளை அசை போட்டபடி இருந்த அஜய்  சாப்பிட சென்றான் தனியே. இப்போதெல்லாம் தனியே சாப்பிடுவது என்பது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. ஆம் தருண் இப்போது தான் ஒரு பிகரை லவ்வ ஆரம்பித்து இருக்கிறான்.அது தான் அஜய் இப்போதெல்லாம் தனிமையாக சாப்பிட காரணம்.


நம் நண்பன் ஒருவன் நல்ல பிகரை மடக்கிட்டானே என்ற சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும்...நமக்கு ஒன்னும் செட் ஆகலையே என்ற வெறுப்பும், தனிமையும் சற்று அஜயை ஆக்கிரமித்து இருந்தது.




எப்போதும் போலவே ஆபிஸ் புட் கோர்ட் அன்றும் மிக நெரிசலாய் நீண்ட க்யூகளுடன். பார்க்குமிடமெல்லாம் ஒவ்வொரு டேபிளிலும் ஜோடி ஜோடியாக அமர்ந்து குலாவியபடி சாப்பிட்டபடி லவ்வும் கோஷ்டிகள்.


உச்சகட்ட கடுப்போடு வழக்கமாய் உண்ணும் "நார்த் இந்தியன் தாலி"  மீல்ஸை வாங்கியபடி காலியாக இருந்த ஒரு டேபிளில் வந்து அமர்ந்தான்.


 "நம்மளால நார்த் இந்தியன் பிகரை தான் கரெக்ட் பண்ண முடியல...அட்லீஸ்ட் நார்த் இந்தியன் தாலியாவது சாப்பிடுவோம் " என்று இவனும், தருணும் பேசிய டையலாக் சட்டென்று அஜய்க்கு ஞாபகத்துக்கு வந்தது.


இவன் அமர்ந்த டேபிளின் பக்கத்துக்கு டேபிளில் ஒரு ஜோடி ரொம்ப நேரமாக ஒன்றுமே சாபிடாமல் ஒருவரை ஒருவரை பார்த்தபடி இருந்தார்கள். இன்னொரு டேபிளிலோ என்ன செய்வது என தெரியாமல் அவள் அவனின் செல் போனை நொண்டிக் கொண்டிருக்க அவன் அவளது ஹான்ட்பேக்கை நொண்டிக் கொண்டிருந்தான். இன்னொரு ஜோடி வாங்கி வைத்த ருமாலி ரொட்டி காய்ந்து விட்ட பிறகும் அதை கொஞ்சம் கூட தொடாமல் கண்ணோடு கண் நோக்கிக் கொண்டிருந்தது.


என்னடா  இப்படி உங்களுக்கு லவ்வு? வாங்கி வெச்ச சோறை கூட திங்காம அப்படி என்னங்கடா உங்களுக்கு எல்லாம் கிறக்கம் வந்துடுச்சு? இவளிடமிருந்து எப்படி எஸ்கேப் ஆகலாம்னு அவனும், அவனை எப்படி எப்படி கழட்டி விடலாம்னு இவளும் மாறி மாறி யோசிப்பதுபோலவே அஜய்க்கு தோன்றியது.




உடனே தனது மொபைலை எடுத்து தருணுக்கு டயல் செய்தான்.
ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..
"ஹலோ! மச்சி!"
"ஹலோ"
"மச்சி நான் தாண்டா பேசுறேன்."
"நான் தான்னா பேரை சொல்லுங்க"
"என்ன மச்சி நான் அஜ..."
"பீப் பீப்"
"அடப் பாவி நான் பேசி முடிக்கறதுக்குள்ளேயே  கட் பண்ணுறியா? விட மாட்டேன் டா உன்ன?" என்று மனதுக்குள் பொறுமிக்கொண்டே மீண்டும் டயல் செய்தான்.
ட்ரிங்..ட்ரிங்...ட்ரிங்...
"ஹலோ! மச்சி நான் தாண்டா பேசுறேன்!"
"டேய் நான்சென்ஸ்! வூ ஆர் யு ப்ளேடி இடியட்...லுக்ஸ் லைக் தீஸ் பீபிள் டோன்ட் ஹாவ் எனி அதர் வொர்க் டார்லிங்! பார்பேரியன்ஸ் "  - எதிர் முனையில் தருணின் குரல்.
தருணின் ஆளுடைய சிரிப்பு சத்தம் கேட்டவுடன் இணைப்பை துண்டித்தே விட்டான் அஜய்.
"அட நாயே! நேத்து நைட் கூட குவார்ட்டரை கவுத்திட்டு என் கிட்ட முக்கா மணி நேரம் உன் ஆளை பத்தின பீத்த பெருமையை எல்லாம் அனத்திட்டு இருந்தியே டா..இப்ப நான் உனக்கு பார்பேரியன்சா?" என்ற படி மீண்டும் தனது முயற்சியைதொடர்ந்தான்.
ட்ரிங்..ட்ரிங்...ட்ரிங்...
"ஹலோ!மச்சி நான் தான்டா அஜய் பேசுறேன்"
"டேய் மச்சி நான் ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன். அப்புறம் பேசுறேன் டா"
"இல்ல டா..நான் பேசப் போறது அதை விட முக்கியமான்..."
பீப்...பீப்...பீப்..
"அட  பாவி மறுபடியும் கட் பண்றியா...எக்கேடோ கேட்டுப் போங்க டா... எனக்கு என்ன ஆச்சு?" என்ற படி "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்க டா போங்க" என்ற பாடலை முணுமுணுத்தபடி அஜய் தனது க்யுபிகில் நோக்கி நடந்தான்.


அன்று இரவு அஜய் அறையில்...
"ஹாய் மச்சி! எப்படி டா இருக்க?"


"ஹலோ சார்! யாரு நீங்க?" இது அஜய்.


"என்ன டா மத்தியானம் எதோ அனத்த வந்தியே...அது என்னன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தா செம காண்டா இருக்க போல..."


"சார்! ப்ளீஸ் டோன்ட் வேஸ்ட் மை ப்ரீஷியஸ் டைம்..கிளம்புறீங்களா?பின்ன என்னடா முக்கியமான மேட்டர்னு கால் பண்ண கட் பண்ற...பார்பேரியன்ஸ்..டார்லிங்க்னு இங்கிலீஷ்ல பீட்டர் விடுற...உங்களுக்கு லவ்வு வந்த போதுமே எதுவும் கண்ணுக்கு தெரியாதே?"


"அதாண்டா...உங்களுக்கு எல்லாம் காண்டு டா...இவனுக்கெல்லாம் ஆள் இருக்குதேன்னு பொறாமை டா உங்களுக்கு...எங்க வுக்காந்து லவ்வு பண்ணினாலும் உங்கள மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்க முடியலடா...நீங்க எல்லாம் என்ன பெரிய கலாச்சார காவலருங்கனு நெனைப்பா? வூட்டுல லவ் பண்ண முடியாதுன்னு தியேட்டருக்கு போனா அங்கயும் உங்களோட தொல்லை...சரி பார்க், பீச் அவ்வளவு ஏன் கோவில்ல கூட உங்க தொல்லை தாங்க முடியலை டா... மெட்ராஸ்ல தினமும் ஒவ்வொரு டிகிரி வெப்பம் ஏறுதுனா அது உங்க வயித்தெரிச்சல் தாண்டா...ஏண்டா இப்படி அடுத்தவன் அந்தரங்கத்துல மூக்கை நுழைக்கப்பாக்குறீங்க?அசிங்கம் புடிச்சவன்களா? " என்று கத்தியபடி சென்று விட்டான்.




"இப்ப நாம என்ன சொல்லிட்டோம்னு இப்படி கத்திட்டு போறான். போனால் போறான் எவ்வளவு நாளைக்குன்னு பார்த்துடலாம்" என்ற படி அன்றைய கோட்டா குவார்ட்டரை கவுத்தினான் அஜய்.


ஒரு வாரம் கழித்து இப்போது  தான் தருணிடம் இருந்து அழைப்பு வருகிறது... நேரம் இரவு 11 :50  
"மச்சி! ஐ ஆம் வெரி சாரி மச்சி"
"பரவால விடு மாமு...என் மேலையும் தப்பு இருக்கு...என்ன தான் க்ளோஸ் பிரெண்டா இருந்தாலும் உன்னோட பெர்சனல் விஷயங்களில் தலையிட்டிருக்ககூடாது"
"அது இல்ல மச்சி...என் ஆளு ஸ்வப்னா இல்ல ..."
"ஹ்ம்ம் சொல்லு டா.."
"அது வந்து...என் ஆளு ஸ்வப்னா இல்ல...என் கிட்ட நீ என் பாய் பிரெண்டே இல்லன்னு சொல்லிட்டா மச்சி"
"நான் கொடுத்த கிப்ட்ஸ், கார்ட் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு, இன்னிக்கு எங்க ப்ராஜெக்ட்ல புதுசா வந்திருக்கிற அந்த சேட்டுப் பையன் கூட சுத்த ஆரம்பிச்சிட்டா மச்சி..."
"சரி பரவால விடுடா..த்ரிஷா இல்லனா திவ்யா.. நான் ஒன்னு சொன்னா நம்ப மாட்ட...அந்த சேட்டான் உன் ப்ராஜெக்ட்கு வேணா புதுசா வந்திருக்கலாம்...ஆனா ரொம்ப நாளா அவன் அவக்கூட சுத்திட்டு தான் இருக்கான்...போன மாசம் நான் கூட அவங்கள பெசன்ட் நகர் பீச்ல கஜகஜ பண்றதை பார்த்திருக்கிறேன். சனியன் தொலைஞ்சதுன்னு விடுவியா? "


"அது இல்லை மச்சி...நான் அவளோட எடுத்த போட்டோ, வீடியோ எல்லாம் இன்னும் அவக்கிட்ட தான் இருக்கு...அஞ்சு லட்சம் கேஷ் கொடு இல்லைனா அந்த போட்டோ,வீடியோ எல்லாம் நெட்ல, ஆர்குட்ல,பேஸ் புக்ல அப்லோட் செஞ்சுருவேன்னு மிரட்டுறா மச்சி" என்று தருண் அழத்தொடங்கினான்.


"ஹலோ பாஸ்! விஷ் யு ஹாப்பி நியூ இயர்" என்று ஒருவன் அஜய்யிடம் கை குலுக்கினான்.
வானில் ஹாப்பி நியூ இயர் 2080  என்ற வாசகத்துடன் வெடித்து  சிதறியது பட்டாசு.!!!

1 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010