ஸ்டார் கவிதை


இது ஸ்டார் கவிதை (அப்படின்னு அவங்களே சொல்லிக்குவாங்க)...நம்ம தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் ஹைக்கூ எழுதினால் எப்படி இருக்குமுன்னு ஒரு சிறிய கற்பனை.இது முழுக்க முழுக்க ஜாலிக்காகவே எழுதப் பட்டது. படிச்சுட்டு சீரியஸ் ஆனா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல. படிச்சுட்டு புரியலைன்னு விளக்கம் கேட்டாலும் கம்பெனி பொறுப்பில்லை...ஹி ஹி...

முதலில் கேப்டன் விஜயகாந்த்:
ஊத்திக் கொடுக்கும் வரை உறவு

ஹ்ம்ம்.. நான்
அங்கிட்டு போனேனா 41
ஹ்ம்ம்..இங்கிட்டு போனேனா 100க்கு மேலே
எங்க போனாலும்
தெய்வமும் நீங்களும்
தான் என் கூட்டணி
ஹ்ம்ம்..வர்ட்டா ஹ்ம்ம்...


டாகுடறு விஜய்:மாமிச உடம்பு மனுஷனுங்ண்ணா

ண்ணா..
அஹ் வணக்கமுங்ண்ணா
அஹ் காந்திங்ண்ணா
அஹ் எம்ஜியாருங்ண்ணா
அஹ் ஜெயலலிதாங்ண்ணா
அஹ் விஜயகாந்துங்ண்ணா
இப்போ நானுங்ண்ணா
ஹி ஹி...
வரட்டும்மாங்ண்ணா


அலட்டல் நாயகன் அஜீத்:


அது

ஏலே
தனியா முளைச்ச காட்டுமரம்லே
நெறைய பேஸ்டேன் பாஸ்
விழாவுக்கு வர சொல்லி
வற்புறுத்துறாங்க அய்யா
கான்பிடேன்ஸ் பாஸ்
கான்பிடேன்ஸ்
அது!!!


சூப்பர் ஸ்டாரு :

கண்ணா...ஹா ஹா ஹாகடமை செய் பலனை (பழனி) எதிர்பார்
அரோகரா அரோகரா
யானை இல்ல குதிரை
இப்போ ஒரு குட்டி கதை சொல்றேன்
'இப்போ ஒரு குட்டி கதை '
கதையா
அதான் சொல்லிட்டேன்ல
ஹா ஹா ஹா
வர்ட்டா கண்ணா...


விரலு நடிகரு:ஆஹ் விரலு ஆஹ் விசிலு


எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா
எங்கப்பா எனக்கு திரைல நடிக்க
கத்துக் கொடுத்து இருக்காரு
வாழ்க்கைல நடிக்க சொல்லித் தரலை
(உருப்படியா ஆகமொத்தம் எதுவும் சொல்லித் தரல)
எவன்டி உன்ன பெத்தான்
மொட்டை மதன் இல்லை மன்மதன்
இந்த நடிப்பு மட்டும்
திரையிலும் வாழ்க்கையிலும்!


பெருங்கரடி:

டண்டணக்கா ஹே டணக்குணக்கா!

ஹவ் டூ யு சே
ஐ ஆம் நாட் எ க்ரவுட் புல்லர்
மானமுள்ள தமிழன்
டப்பு டிப்பி டாப்பு டிப்பி
டுப்பு டப்பு டூப்பு டாப்பு
இது தான் என் மெட்டு
அதுக்கேத்த பல பாட்டு
யு ஆர் ப்ரம் விச் டெலிவிஷன்?


காமெடியன் செந்தில்:அண்ணே நீங்க அறிவுக் கொழுந்துண்ணே


அண்ணே
இதுல எப்புடிண்ணே விளக்கெரியும்
அதானே இது
அஹாண்ணே
எனக்கு அமேரிக்கவில சூட்டிங் இருக்குது
அதனால் தான் சொல்கிறேன்
காத்தவராயனுக்கு ஓட்டுப் போடுங்கள்
புலிக்குட்டி ப்ரதர் பூனைக்குட்டி
ஹரே ஒஹ் சாம்போ!


குழப்ப நாயகன் கமலஹாசன்:
ஆஹ் ஆஆஅஹ் ஆஆஹ்!!

வணக்கம்
டாவுக்கு கண்ணு டொக்கு
சொத்தைப் பல்லுக்கு
சொத்தையே பிரிக்கிறதா
உன் உள்பாடி சைஸ் என்ன?
கடவுள் இருந்தா நல்லா
இருக்கும்னு சொல்றேன்
நல்லவனா கெட்டவனா?
கடவுள் பாதி மிருகம் பாதி
கண்ணுக்குட்டி அம்மா
செத்து போச்சு கண்ணுக்குட்டி
ஏற்றத் துணியும் அணி சேர்த்துக்கணுமா?
அன்பே சிவம்!
அடியேன் ராமானுஜதாசன்
இல்லை கமலஹாசன்!


தலைவரு கவுண்டமணி:


அடங்கொன்னியா!

இதுக்கு பேரு தான் மேண்டில்
இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு
ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்ங்கறது
யூரின் வரட்டும் வரட்டும்
துன்பத்திலும் இன்பம்
கொசு தொல்லை தாங்க முடியல டா
தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைடா
நான் பால்காரன்
நர்ஸ் இல்லடா பர்சு..பர்சு...
டிப்பன் பாக்ஸ் தலையா
கரிச்சட்டி தலையா
கோமுட்டி தலையா
பிசாசு தலையா
அட போங்கடா
சொறி புடிச்ச மொண்ணை நாய்ங்களா...
காத்து ரெண்டுலயும் குய்ன்ன்னு கேக்குது
ஐயோ சிரிக்கிறா டா சிரிக்கிறா
ஐ ஆம் கிரேட் தி மிஸ்டேக்
டன் தி மிஸ்டேக்!!!


இனி ஸ்டார்ட் ம்யூசிக்..எனக்கு அர்ச்சனை ஆரம்பியுங்க...

1 ரீலு ஓடிருக்கு..:

  1. வணக்கம் சகோதரம், ரசித்தேன், ஒரு சில கவிதைகள் புரியாமல் இருக்கின்றன. விளக்கம் கேட்டால் விளக்குமாறு பிஞ்சுவிடும் என்பதால் ஓடிப் போகிறேன்.
    விஜயகாந்த், விஜய், அஜித், ரஜினி வசனங்கள் யதார்த்தம்.
    ஆனால் விரலு நடிகரு, பெருங்கரடி, செந்தில், கமலஹாசன், கவுண்டமணி வசனங்கள் புரிந்தும் புரியாமலும் இருக்கு. உங்கள் புளொக் மீளக் கிடைத்தமை மகிழ்ச்சியே.
    இன்னொரு விடயம் உங்களின் வழமையான நகைச்சுவைகள் இப் பதிவில் இல்லைத் தோழா. ஏதோ அவசரத்தில் ஏர்ஜெண்டா இப் பதிவு போட்டது மாதிரி இருக்கு. அடுத்த பதிவை வழமையான அசத்தல், கலக்கல் காமெடிகளுடன் எதிர்பார்க்கிறேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010